விஐடியில் அக் 8, 9 தேதிகளில் உழவர் களஞ்சியம் (Agri Expo-2018) வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்


No automatic alt text available.Image may contain: one or more people, people standing and outdoor

விஐடியில் அக் 8, 9 தேதிகளில் உழவர் களஞ்சியம் (Agri Expo-2018) வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்.

விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் அக் 8,9 தேதிகளில் உழவர் களஞ்சியம் (Agri Expo) என்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.               8 ம்தேதி இதனை மாநில வருவாய் நிர்வாக முதன்மைச் செயலாளர் முனைவர் கே.சத்யகோபால் தொடங்கி வைக்கிறார். இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் ஆப்ரிக்க - ஆசிய ஊரக வளர்ச்சி  நிறுவனத்தின் செக்ரட்ரி ஜென்ரல் மேதகு வாசிப் ஹாசன் எல்.ஷிரின், நியூசிலாந்து நாட்டின் வெளிவிவகாரம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் அலுவலர் நீல் கென்னிங்டன், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி..ராமன் ஆகியோர் கௌரவ விருந்தனர்களாகவும்  மற்றும் 4,500 க்கும் மேற்பட்ட வேளான் பெருமக்களும் பங்கேற்கின்றனர்.

இது சம்மந்தமாக விஐடி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண்மை வளர்ச்சிக்கான பல்வேறு நிகழ்வுகளை விஐடி பல்கலைகழகம் மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த சில வருடங்களாகஉழவர் களஞ்சியம்’ என்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் விவசாயிகளின் நலனுக்காக விஐடியில் நடத்தப்பட்டு வருகிறது. இயற்கை வேளாண்மை, வேளாண்மையில் புதிய சாகுபடி முறைகள், நீர் மேலாண்மை, வேளாண் கருவிகள் மற்றும் இயற்கை உரங்கள் பயன்படுத்துவது சம்மந்தமாக வேளாண் நிபுணர்களை கொண்டு விவசாயிகளுக்கு தெரிவிப்பதற்கான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, உழவர் களஞ்சியம் நிகழ்ச்சி அடுத்த மாதம் அக் 8,9 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி தொடக்க விழா விஐடியில் உள்ள அண்ணா அரங்கில் அக் 8 ம்தேதி காலை 10.00 மணியளவில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகிக்கிறார். விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ,துணை வேந்தர் முனைவர் ஆனந்..சாமுவேல்  ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

 

நிகழ்ச்சியில் தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் இயற்கை பேராழிவு மேலாண்மை ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் முனைவர் கே.சத்யகோபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உழவர் களஞ்சியம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசுகிறார். அதனை தொடர்ந்து 12 மணியளவில் கிரினோ அரங்கில் (Greeno) நடைபெறும் பாரம்பரிய விவசாயம்  பற்றிய   தொழில்நுட்ப நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் நியுசிலாந்து நாட்டின் வெளிவிவகாரம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் உயரதிகாரி நீல் கென்னிங்டன் கௌரவ விருந்தினராக பங்கேற்று நிகழ்வை தொடங்கி வைக்கிறார். இதில் விஐடி வேளாண்மை முதலாம் ஆண்டு மாணவ மாணவியரின் பாரம்பரிய விவசாயம் பற்றிய கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

ஆப்ரிக்க ஆசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் செக்ரட்ரி ஜென்ரல் மேதகு வாசிப் ஆசன் எல்.ஷெரின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

மொரிசியஸ் நாட்டின் ஜனாதிபதி மேதகு பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்கள் விஐடியில் வேளாண்மைத் துறையினையும், வேளாண்மை பண்ணையினையும் துவக்கி வைக்கிறார்.

இவ்விரு நாட்களும் வேளாண் நிபுணர்கள், பேராசிரியர்கள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்கும் வேளான் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

 உழவர் களஞ்சியம் நிகழ்வை யொட்டி நடத்தப்படும் வேளண் கண்காட்சியில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ப்பு ,வேளாண் சார்ந்த தொழில் உள்ளிட்டவைகள் அரசு மற்றும் அரசு துறை நிறுவனங்கள், விவசாயிளுக்கு வேளாண் கடன் வழங்கும் வங்கிகளின் அரங்குகள், வேளாண் உற்பத்தி பொருட்கள் தனியார் நிறுவனங்கள், உழவர் கூட்டமைப்பு உள்ளிட்ட 100 அரங்குகள் இடம் பெறுகின்றனஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் விவசாயிகளுக்கு வாகனம் மற்றும் உணவு வசதி இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்கள், பொறியியல் தொழில்நுட்பங்கள், நீர் மேலாண்மை, இயற்கை உரங்கள், காளான் வளர்ப்பு, காய்கறி மற்றும் பழப்பயிர்களுக்கான தொழில்நுட்பங்கள் விவசாய விற்பனை உத்திகள் குறித்து விளக்கமளிக்கபடுக்கிறது. மேலும் விவசாய பெருமக்களின் உழவியல், மண், நீர், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிச்சனைகளை பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பிரிச்சனைகளுக்கான தீர்வுகளை கண்டறிந்து அவற்றை கலைவதற்காண புதிய உத்திகளையும், யோசைனைகளையும் பெற்று விவசாயிகளுக்கு தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.