புலவர் பதுமனார் இயற்றிய நூல்கள் விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார்.நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பாராட்டுரை


வேலூரில் நடைபெற்ற விழித்தால் விடியும் மற்றும் வடமொழி வழக்கு தெளிதமிழ்ச்சொல் அகராதி ஆகிய நூல்கள் வெளியீட்டு விழாவில்  தமிழியக்க தலைவரும் விஐடி வேந்தருமான டாக்டர் ஜி.விசுவநாதன் நூல்களை வெளியிட்டார்.உடன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ,விஐடி துனைத்தலைவர் ஜி.வி.செல்வம், நூலாசிரியர் புலவர் பதுமனார், தமிழ்வேல் விருது பெற்ற சிவாலயம் ஜெ.மோகன், தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தம் சுவாமிகள், முனைவர் அப்துல் காதர் ,முனைவர் இ.சுந்தரமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.  

 

 

 

புலவர் பதுமனார் இயற்றிய நூல்கள் விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார்.நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பாராட்டுரை

தமிழியக்க பொருளாளர் புலவர் பதுமனார் எழுதிய இரு நூல்களை வேலூரில் நடைபெற்ற விழாவில் விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார். இதில்தமிழ்வேள் விருது பெற்ற சிவாலயம் மோகன் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதபதி ஆர்.சுரேஷ்குமார் பங்கேற்று பாராட்டி பேசினார்.

குடியாத்தம் புலவர் வே.பதுமனார் எழதிய நூல்கள் விழித்தால் விடியும் மற்றும் வடமொழி வழக்கு தெளிதமிழ்ச்சொல் அகராதி ஆகியவை வெளியீட்டு விழா மற்றும் தமிழ்வேள் விருது பெற்ற சிவாலயம் ஜெ.மோகனுக்கு பாராட்டு விழா வேலூரில் உள்ள கண்ணா மகாலில் நடைபெற்றது.தமிழியக்கம் மற்றும் வேலூர் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விழாக்குழு தலைவரும் விஐடி துணைத் தலைவருமான ஜி.வி.செல்வம் வரவேற்றார்.குடியாத்தம் கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தொடக்க உரை நிகழ்த்த இரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோயிலின் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள், வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலய தலைவர் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் அருளாசி வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் தமிழியக்கத்தின் தலைவரும் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் ஜி.விசுவநாதன் பங்கேற்று புலவர் பதுமனார் எழுதிய விழித்தால் விடியும் என்ற நூலினை வெளியிட அதன் முதல் பிரதியை ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்ல தலைவர் ஜெ.லட்சுமணன் பெற்றுக்கொண்டார்.நூலினை வெளியிட்ட வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் பாராட்டி பேசியதாவது

நூல் வெளியீட்டு விழா மற்றும் தமிழ்வேள் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா என இருவிழாக்களும் ஒன்றாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற வகையில் உள்ளது.தமிழ்வேல் விருது தொடங்கப்பட்டு 100,110 ஆண்டுகளில்   கரந்தை தமிழ்ச் சங்த்தை தோற்று வித்த உமாமகேஸ்வரன் ,நீதிகட்சி தோன்ற காரணமாக இருந்த பி.டி.ராஜன் ,நூல் பதிப்பாளர் மெய்யப்பன் ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.இப்போது சிவாலயம் மோகனுக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.கணினி பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றவருக்கு தமிழின் மீதுள்ள பற்றால் தமிழுக்கு சேவை செய்து வருகிறார் கடந்த அக்டோபர் 19ல் தமிழியக்கம் தொடங்கப்பட்டது அதில் சிவாலயா மோகன் பொருளுதவியுடன் சேவையும் செய்து வருகிறார்.

தமிழர்கள் உயர்ந்த மொழிக்கு சொந்தக்காரர்கள் என்ற உணர்வை வீடுகள் தோறும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது தான் தமிழியக்கம்.உலகில் 6,900 மொழிகள் பேசப்படுகின்றன.இதில் அதிகம் பேசப்படுவது139 மொழிகள் இதில் பெருபான்மையினர் பேசும் மொழி தமிழ் மொழி , உலகில் மூத்த  மொழிகள் என்று ஐரோப்பா கண்டத்தில் கிரேக்கமும் லத்தினும், மேற்கு ஆசியாவில பாரசீகமும் இபுருவும் ,இந்தியாவில் தமிழும் சமஸ்கிரதமும் ,சீனாவின் சீன மொழி என 7மொழிகள் தான் கூறப்படுகிறது.இதில் லத்தினும், சமஸ்கிரதமும் வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது பலமொழிகள் எழுத்து வடிவிலும் பேச்சு வழக்கிலும் மாறிவிட்டன.மாறமல் இன்றும் வழக்கத்தில் இருப்பது தமிழும் சீனமும் தான்.இதில் தமிழ்மொழி சீனமொழியை விட மூத்த மொழியாகும் 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்மொழியாகும்.தமிழ் மொழியில் இலக்கண, இலக்கியம் தோற்றுவிக்கப்பட்ன.3 ஆயிரம் ஆண்டுக்களுக்கு முன்பு எழுதப்ட்ட தொல்காப்பிய நூல் இலக்கிய வடிவில் எழுதப்பட்டது.

வேலூர் மாவட்டத்தின் ஒரு பக்கத்தில் தெலுங்கு பேசுபவர்களும், இன்னொரு பக்கத்தில் கன்னடம் பேசுபவர்களும் ,உருது மொழி பேசுபவர்கள் பரவலாகவும் உள்ளனர்.எல்லோரையும் தமிழ் பேசுபவர்களாக மாற்ற வேண்டும்.இன்று இலக்கணத்தை கடைபிடிப்பவர்களை பார்க்க கஷ்டமாக உள்ளது இதை மாற்றும் நடவடிக்கையை தமிழியக்கம் தொடங்கியுள்ளது.உலகில் உள்ள தமிழ்களை தமிழ் பேசுபவர்களை ஒன்றாக இணைத்து பார்க்க வேண்டும்.யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கனியன் பூங்குன்றனார் அந்த காலத்திலேயே எழுதியுள்ளார். இன்று உலகமயமாக்களை பற்றி பேசுகிறோம்  ஆனால் இராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் திருக்குறளில் அதனை பற்றி  குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்களுக்கு குரானும், கிறித்துவர்களுக்கு பைபிளும் வேதமறைகளாக உள்ளன, உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் எல்லா காலத்திலும் பொது மறையாக திருக்குறள் உள்ளது.அகிம்சை வழியில் நடக்கும் விடுதலை போராட்டம் பற்றி காந்தியடிகள் அறிஞர் டால்ஸ்டாயிக்கு கடிதம் எழுதியிருந்தார்.அதற்கு பதில் எழுதிய டால்ஸ்டாய்  கடிதத்தில் அஹிம்சை பற்றி திருக்குறளில் அப்போதே கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.இதை கண்ட காந்தியடிகள் திருக்குறளை படிக்க வேண்டும் அடுத்த அவதாரத்தில் தமிழனாக பிறக்க வேண்டும் என்று கூறினாராம்.

பெயரை பார்த்தே இவர் எந்த நாட்டை  சேர்ந்தவர் என்று அறிய முடியும் ஆனால் இப்போது தமிழரை அப்படி அறிய முடிவதில்லை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலக புகழ் பெற்ற கல்லனையை கட்டிய கரிகால பெருவளத்தான் என்ற சோழ மன்னன் தன் பிள்ளைகளுக்கு நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி, மாவளத்தான் என்று தமிழ் பெயரை வைத்துள்ளான்.இது போன்ற நிலை இனி வரவேண்டும் அதற்கான பணிகளை தமிழியக்கம் செய்யும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் வடமொழி வழக்கு தெளிதமிழ்ச்சொல் என்ற நூலினை புதுச்சேரி தமிழ்ச்சங்க தலைவர் வெ.முத்து வெளியிட கீழ்ஆலத்தூர் அபிராமி மகளிர் கலை அறிவியல் கல்லூரி தலைவர் எம்.என்.ஜோதிகுமார் பெற்றுக் கொண்டார்.இதில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் சிறப்புவிருந்தினராக பஙகேற்று பாராட்டி பேசினார்.நிகழ்ச்சியில் தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி ,தமிழியக்க பொதுச்செயலாளர் முனைவர் அப்துல்காதர் ஆகியோர் நூல்களை பற்றிய ஆய்வுரை வழங்கினர்.இதில்  தமிழியக்க செயலாளர் மு.சுகுமார், விழாக்குழு செயலாளர் மு.சீனிவாசன் ,பொருளாளர் பூமிநாதன் ,டார்லிங் குழும தலைவர் வெங்கடசுப்பு ,பி.டி.கே.மாறன், ஆடிட்டர் பாண்டியன் உள்ளிட்டவர்கள் வாழ்த்தி பேசினர்.முடிவில் நூலசிரியர் புலவர் பதுமனார் தமிழ்வேல் விருது பெற்ற ஜெ.மோகன்  ஆகியோர் ஏற்புரை வழங்கினர். நிகழ்ச்சியில் விழாக்குழு சார்பாக அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளைக்கு ரூ.20 ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது.

 

வேலூரில் நடைபெற்ற விழித்தால் விடியும் மற்றும் வடமொழி வழக்கு தெளிதமிழ்ச்சொல் அகராதி ஆகிய நூல்கள் வெளியீட்டு விழாவில்  தமிழியக்க தலைவரும் விஐடி வேந்தருமான டாக்டர் ஜி.விசுவநாதன் நூல்களைவெளியிட்டார்.உடன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ,விஐடி துனைத்தலைவர் ஜி.வி.செல்வம், நூலாசிரியர் புலவர் பதுமனார், தமிழ்வேல் விருது பெற்ற சிவாலயம் ஜெ.மோகன் ,தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தம் சுவாமிகள், முனைவர் அப்துல் காதர் ,முனைவர் இ.சுந்தரமூர்த்தி ஆகியோர் உள்ளனர்