கலசலிங்கம் பாலிடெக்னிக் 36–வது அணி துவக்கவிழா


கலசலிங்கம்  பாலிடெக்னிக் 36–வது அணி துவக்கவிழா

கலசலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரி 36வது பேட்ச் முதலாம் ஆண்டு மாணவர்கள் துவக்க விழா கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் வெ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.
பாலிடெக்னிக் பழைய மாணவர் பேராசிரியர் முத்துக்கண்ணன், சிவா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனர். முதல்வர் எம்.கருணாநிதி, மாணவர்களை வாழ்த்திப்பேசினார். மாணவர்கள் கல்லூரியில் பின்பற்றவேண்டியவற்றைக் கூறினார். அனைத்துதுறைத்தலைவர்களும் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டனர். மேலும் ஏப்ரல் 2018ல் 100/100 மதிப்பெண் பெற்ற 42 மாணவர்களுக்கு மெடலும் சான்றிதழும் பதிவாளர் வழங்கினார். ஆசிரியர் எம். முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.