விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது (Life Time Achivement Award) பூனாவில் நடைபெற்ற தேசிய ஆசிரியர் மகாசபை மாநாட்டில் வழங்கப்பட்டது


விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

(Life Time Achivement Award)

பூனாவில் நடைபெற்ற தேசிய ஆசிரியர் மகாசபை மாநாட்டில் வழங்கப்பட்டது

அரசியலில் சாதனை ஏழை மாணவர்களுக்கு விஐடியில் இலவச உயர்கல்வி வழங்குவதற்கான ஸ்டார்ஸ் திட்டம் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளைஉள்ளிட்டவைகளில் சாதனை படைத்து வரும் விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதனுக்கு பூனாவில் நடைபெற்ற தேசிய ஆசிரியர் மகாசபை (National Teachers Congress) மாநாட்டில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் வழங்கும்  கல்லூரிகளில்    பணியாற்றும் ஆசிரியர்களுக்கான 3வது உலகளாவிய தேசிய ஆசிரியர் மாநாடுஅண்மையில் மகாராஷ்டிர மாநிலம் பூனாவில் உள்ள எம்ஐடி உலக அமைதி பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் நடைபெற்றதுஇதில் சர்வதேச அளவில்  5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்  பங்கேற்றனர்.

மாநாட்டில்  டிஜிட்டல் புரட்சிக்கான உயர்கல்வியில் தேவைகள் என்பது பற்றி ஆசிரியர் மாணவர்களுக்கு எத்தகைய கற்பித்தல் முறையை கையாளுவதுஎன்பது பற்றி இந்த மாநாட்டில் பேசப்பட்டது.

மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் கௌரவிக்கப்பட்டார்அரசியலில் சாதனை விஐடியில் சர்வதேச தரத்தில்உயர்கல்வி விஐடியில் ஏழை மாணவர்களுக்கான இலவச கல்வி திட்டமான ஸ்டார்ஸ் திட்டம் வசதியற்ற மாணவர்கள் எந்த உயர்கல்வி நிறுவனத்தில்பயிலுவதற்கான அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை திட்டம் ஆகியவற்றில் சாதனை படைத்து வருவதற்காக விஐடி வேந்தர் டாக்டர்ஜி.விசுவநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதுஅதனை தேசிய ஆசிரியர் மகாசபை நிறுவனர் மற்றும் எம்ஐடி உலக அமைதிபல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் விஸ்வநாத் காரத்,  தேசிய ஆசிரியர் மகாசபை பேராசிரியர் தலைவர் ஆர்.. மஷெல்கர் ஆகியோர் இணைந்துவழங்கினர்.