வேல்ஸ் பல்கலை கழக குடும்ப விழா


வேல்ஸ் பல்கலைக் கழகத்தில், தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு, விருது வழங்கப்பட்டது.வேல்ஸ் கல்வி குழுமத்தின் நிறுவனர், டாக்டர் ஐசரி கே கணேஷின், பிறந்த நாளான நேற்று, ஈஞ்சம்பாக்கம், வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில், குடும்ப விழா கொண்டாடப்பட்டது.குரு பக்திவிழாவில், 'கெர்ரி இன்டெவ் லாஜிஸ்டிக்ஸ்' தலைவர், சேவியர் பிரிட்டோ பேசியதாவது:ஐசரி கணேஷிடம், தெய்வ பக்தி, குரு பக்தி, நண்பர்கள் பாசம், மாணவர்கள் நலன் அதிகம். அது தான், அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. திறமை, மனித நேயம் இருந்தால், யாரும் எந்த இலக்கையும் அடைய முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான, கமல் பேசியதாவது:இந்த குடும்ப விழாவை, நட்பு, உறவாக மாறும் விழாவாக பார்க்கிறேன். இன்று முதல், வேல்ஸ் குடும்பத்தில், நானும் ஒருவனாக இருக்கிறேன். ஐசரி கணேஷின் தந்தை ஐசரி வேலன், அரசியலில் பல பதவிகள் கிடைத்தும் கூட, கலைத்துறையின் மீது கொண்ட தீராத ஆர்வத்தால், வாழ்நாளில் கடைசி வரை நடித்தார்.என்னுடைய பெருமைகளை, என் தாய் பார்க்காமல் சென்றுவிட்டார். என் சந்தோஷத்தை, இந்த குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள கிடைத்த வாய்ப்பை, அரிதாக கருதுகிறேன்.இவ்வாறு கமல் பேசினார்.மகிழ்ச்சிவேல்ஸ் பல்கலைக் கழக வேந்தர், ஐசரி கே கணேஷ் பேசியதாவது:குடும்ப உறுப்பினர்கள், ஊழியர்கள், நண்பர்கள் சேர்ந்து, ஆண்டுதோறும் குடும்ப விழாவை சிறப்பாக நடத்தி வருகிறோம். எங்கள் கல்வி நிறுவனம், 25 ஆயிரம் மாணவ - மாணவியருடன், 25 ஆண்டுகளாக, வீறு நடை போட்டு செல்கிறது. இதற்கு, இங்கு பணிபுரியும் ஒவ்வொருவரும் காரணம். அவர்களை கவுரவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், 'வேல்சு சிறகு' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. வேல்ஸ் பல்கலைக் கழகத்தில், தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு, விருது வழங்கப்பட்டது.ஐசரி கே கணேஷின் தாய், புஷ்பா ஐசரி வேலன், வேல்ஸ் பல்கலைக் கழக பதிவாளர், வீரமணி, துணைத் தலைவர், ஜோதி முருகன், ஆர்த்தி கே கணேஷ் மற்றும் ஊழியர்கள், மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.