V Sparc Vellore Heritage Connectவி ஐ டி கட்டிடக்கலை பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி.


இந்திய பாரம்பரியம்  மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தி வி ஐ டி கட்டிடக்கலை பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி. 

வி ஐ டி கட்டிடக்கலை பள்ளி மாணவ மாணவிகள் இந்திய பாரம்பரிய மற்றும் வரலாற்றுக் நினைவுச்சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தி வேலூர் கிரீன் சர்க்கிளிலிருன்ந்து கோட்டை வரை நடைப்பெற்ற  விழிப்புணர்வு பேரணியை  டெல்லியை சார்ந்த இண்டாக் நிறுவனத்தின் தலைமை கட்டிடக் கலை நிபுணர் நவின் பிப்லானி துவக்கி வைத்தார்.

மேலும் வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் , வி ஐ டி கட்டிடக் கலை மாணவர்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடங்கள் மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்களை ஓவியங்களாக தீட்டி பார்வைக்கு வைக்கப்பட்டன . பின்பு தஞ்சாவூரை சார்ந்த கட்டிடக்கலை நிபுணர் முனைவர். தனசேகரன் முத்து மாணவர்களிடையே பேசும் போது ஒவ்வொரு நாட்டிற்க்கும் வரலாறும் பாரம்பரியமும் முக்கியம். நம் இந்திய நாட்டை பொருத்தவரை பல வரலாறுகள், பாரம்பரியம் மற்றும் நினைவுச்சின்னங்கள் உள்ளன.  அது போல வரலாறுகளும் பாரம்பரியமும் மண்ணை சார்ந்தே இருக்கும் என்றும் நாம் அனைவரும் வரலாறுகளை பாதுகாக்க பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

முன்னதாக வரலாற்று மற்றும் பாரம்பரியம் பாதுகாப்பதை குறித்த கருத்தரங்கம் 5ஆம் தேதி தொடங்கி இன்று (7-1-0-2018 )நிறைவுபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கட்டிடக்கலை பள்ளி இயக்குநர் என்.தேவி பிரசாத் மற்றம் பேராசிரியர்கள் செய்தனர். விழிப்புணர்வு பேரணியில் 100 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.