காரைக்குடி காளை அணியில் முத்திரை பதிக்கும் மான் கே Maan Bafna impresses for Karaikudi Kaalaiபாஃப்னா


சங்கர் சிமெண்ட் டிஎன்பிஎல் 2018 சீசனில், ஐட்ரீம் காரைக்குடி காளையின் முக்கிய வீரராக மான் பாஃப்னா உருவெடுத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், லீக் சுற்று முடிவடைந்து, பிளே ஆஃப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், ஐட்ரீம் காரைக்குடி காளை அணிக்கு ஒரு புது ஆல் ரவுண்டர் கிடைத்துள்ளார். அவர், மான் கே பாஃப்னா ஆவார். 23 வயதாகும் அவர், இந்த தொடரில் இதுவரை 190 ரன்களை எடுத்துள்ளார். சிறப்பாக பந்து வீசி, 8 போட்டிகளின் அடிப்படையில் எகானமி ரேட்டிங்கை 7.00 ஆக தக்க வைத்துக் கொண்டதோடு, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், அந்த அணியின் நம்பகத்தன்மை வாய்ந்த ஆல்ரவுண்டராக அவர் திகழ்ந்து வருகிறார். சென்னையை சேர்ந்த பாஃப்னா, கோவையில் 10ம் வகுப்பு வரை படித்தவர். பின்னர் கிரிக்கெட் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக, மீண்டும் சென்னைக்கு வந்து, பயிற்சியில் ஈடுபட தொடங்கினார். இவர், செயின்ட் பேட்ரிக் ஏஐஹெச்எஸ்எஸ் பள்ளியில் படித்தவர். இடது கை சுழற்பந்து வீச்சாளரான பாஃப்னா, மிதவேகப் பந்துவீச்சாளராக இருந்தார். பின்னர், சுழற்பந்து வீச்சுக்கு மாற்றிக் கொண்டார். அவர் கூறுகையில், ''14 வயதுக்கு உட்பட்டோருக்கான டிக்கி மெமரியல் தொடரில், ஹாட்ரிக் விக்கெட் உட்பட 5 விக்கெட்டுகள் எடுத்ததே எனக்கு அங்கீகாரம் கிடைக்க உதவியது,'' எனக் குறிப்பிடுகிறார். மேலும் கூறுகையில், ''எனது பயிற்சியாளர் கே.ஆர்.சிவபிரகாஷ் எனக்கு 2 ஆண்டுகளாக கடும் பயிற்சி அளித்தார். அதனால், சுழற்பந்து வீச்சில் நன்கு முன்னேறினேன். அத்துடன், பேட்டிங் செய்யவும் அவர் சிறப்பாக பயிற்சி அளித்தார்,'' என்று, பாஃப்னா தெரிவிக்கிறார். பள்ளி படிப்பு முடித்ததும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஏ. பட்டம் பயின்ற பாஃப்னா, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பிரிவு போட்டிகளில், சென்னை மற்றும் இந்தியா பிஸ்டன்ஸ் அணி சார்பாக விளையாடியுள்ளார். ஆனால், வருமான வரித்துறை அணிக்காக அவர் திறமையாக ஆடியதன் அடிப்படையில்தான், தமிழ்நாடு பிரீமியர் லீக தொடரின் அறிமுக தொடரான 2016ம் ஆண்டு போட்டிகளுக்கு முதன்முதலாக தேர்வாகியுள்ளார். இறுதியாக, ''வெங்கடேஸ்வரா கோப்பைக்காக ஆடியதை பார்த்த கேபி அருண் கார்த்திக், தமிழ்நாடு பிரீமியர் லீக் முதல் தொடரில், மதுரை அணியில் ஆட வாய்ப்பு அளித்தார். அதனால், நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். தற்போது அழுத்தமான சூழலில் திறமையாக ஆடுவது பற்றி நன்கு தெரிந்து கொண்டேன். அதனால், தற்போது சிறப்பாகவும் ஆடி வருகிறேன்” எனவும் பாஃப்னா சுட்டிக்காட்டினார். கோவை அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்ததால், காரைக்குடி காளை அணி தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.. Maan K Bafna, the 23-year-old all-rounder who scored 190 runs and took five wickets at an economy rate of 7.00 in eight matches, was a key player in iDream Karaikudi Kaalai’s campaign to the 2018 Sankar Cement-TNPL Playoffs. Chennai-born Bafna was raised in Coimbatore where he studied until Class X before relocating to Chennai to pursue his passion for cricket. He completed his schooling at St Patrick’s AIHSS. The left-arm spinner originally began as a medium-pacer. “In the Dicky Memorial under-14 tournament I picked up five wickets including a hat-trick,” Bafna recalled. Bafna shifted to left-arm spin after realising that he wasn’t generating sufficient pace. “My coach KR Sivaprakash and I worked hard for two years on my left-arm spin. He also gave me the confidence to bat up the order,” he said. Bafna holds an MBA from SRM University, Chennai and represents India Pistons in the TNCA Elite first division. However, he earned his selection in the inaugural edition of the TNPL in 2016 on the basis of his performances for Income Tax team. “KB Arun Karthik saw me play in the Venkateswara Cup and I was picked up by Madurai franchise in the inaugural season. I learned a lot while playing under pressure and I am a better player now,” concluded Bafna. Karaikudi Kaalai bowed out of the competition after losing to Lyca Kovai Kings in the Eliminator.