சிறகுகளும் சீறிப்பாய்ந்த ஓர் இறகுப் பந்தாட்ட போட்டி.. சிங்கப்பூர் தமிழர்கள் கலக்கல்


  

ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர்முதலுதவி விளக்கம்

 சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம், சிங்கப்பூர் கிளையின் சார்பில் மூன்றாவது ஆண்டாக இறகுப் பந்து போட்டிகளை ஏற்பாடு செய்து, வெற்றிகரமாக நடத்தியுள்ளது. சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இரு பிரிவினரும் இந்த இறகுப்பந்து போட்டிகளில் பங்கேற்றனர். விளையாட்டு நிகழ்ச்சியோடு, ஆபத்துக் காலத்தில் முதலுதவி அளித்தல் தொடர்பான ஒரு விளக்க நிகழ்ச்சியும் நடந்துள்ளது. 3வது ஆண்டாக நடந்தது சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அக்டோபர் மாதம் 07 ஆம் தேதி அன்று யூனிட்டி உயர்நிலைப் பள்ளியின் உள்விளையாட்டரங்கில் மிகச் சிறப்பான முறையில் தனது உறுப்பினர்களுக்கான இறகுப்பந்தாட்ட போட்டியினை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்திருந்தது. ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர் ஆண்களுக்கு இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவுகளிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒற்றையர் பிரிவிலும் போட்டிகள் நடைபெற்றன. அறுபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த போட்டியில் உற்சாகமாக கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். முதலுதவி விளக்கம் வாழ்க்கையிலும் விளையாட்டிலும் பாதுகாப்பே பிரதானம் என்பதால் இடைவேளை நேரத்தில் முதலுதவி செய்வது பற்றிய விளக்கப்பாடத்திற்கு தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்து முன்னெடுக்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் தங்கள் வாழ்நாட்களில் மற்றவர்களுக்கான அவசர காலங்களில் உதவும் ஒரு வாய்ப்பாக இந்நிகழ்ச்சி அமைந்தது. போட்டி ஏற்பாடுகள் இந்த போட்டியினை செயலாளர் திரு ரா. சங்கர் (1989 C), இளையோர் குழுத் தலைவர் திரு.நெடுஞ்செழியன்(1990 C&S) மற்றும் ஏற்பாட்டு குழுத் தலைவர் திரு R. கார்த்திக் (2008 Phy Ed ) உடன் மூத்த உறுப்பினர் திரு.கருணாநிதி (1994 M&P), திரு க. முரளி (2007 M), திரு ஜெ. கார்த்திக் (2007 C&S) மற்றும் திரு N. கார்த்திக் (2007 M) ஆகியோர் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.