கால்பந்து; நீலகிரி அணிக்கு கோப்பை


பல்லடத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில், நீலகிரி அணி கோப்பையை கைப்பற்றியது. பல்லடம் எம்.சி., கால்பந்து கழகத்தின் சார்பில், 9ம் ஆண்டு நினைவு, மாநில அளவிலான, ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.


இறுதி போட்டியில், நீலகிரி ப்ளூ அணி, 1:0 என்ற கோல் கணக்கில், திண்டுக்கல் கே.எப்.சி., அணியை வீழ்த்தி, கோப்பையை கைப்பற்றியது. மெட்ராஸ் எப்.சி., அணி, 1:0 என்ற கோல் கணக்கில், 3ம் இடமும், சேலம் ஓல்டு பாய்ஸ் அணி, 4ம் இடமும் பிடித்தன.

சிறந்த விளையாட்டு வீரராக, திண்டுக்கல் கே.எப்.சி., அணியின் சதாம், மற்றும் சிறந்த கோல் கீப்பராக, மெட்ராஸ் எப்சி., அணி வீரர் டிபின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு, இந்திய அணியின் முன்னாள் கால்பந்து வீரர் ராமன் விஜயன் கோப்பை, மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.