சதுரங்க போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு


மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்க, சிறுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் மற்றும் லாஸ்ட் ஸ்கொயர் செஸ் அகாடமி சார்பில்,சிறுவர்களுக்கான மாவட்ட சதுரங்க போட்டி, அம்பத்துார், சேது பாஸ்கரா மெட்ரிக் பள்ளியில், 26ம் தேதி நடக்க உள்ளது. இதில், 8, 12, 16 மற்றும் 20 வயதிற்கு உட்பட்ட, சிறுவர் மற்றும் சிறுமியர் இருவருக்கும், தனித்தனி போட்டிகள் நடக்க உள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்பும் சிறுவர்கள், 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 84382 60207, 72997 05538 ஆகிய அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.