கூடைப்பந்து இந்தியன் வங்கி வெற்றி


மாநில கூடைப்பந்து போட்டியில், இந்தியன் வங்கி அணி முதலிடத்தை பிடித்தது.சென்னை ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், 14வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, சென்னை, தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி திடலில், 3ல் துவங்கி, நேற்று முன்தினம் இரவுடன் நிறைவடைந்தது.


இதில், ஆண்கள் பிரிவில், சுங்க இலாகா, இந்தியன் வங்கி உட்பட, 66 அணிகளும்; பெண்கள் பிரிவில், 20 அணிகளும் பங்கேற்று விளையாடின. நேற்று முன்தினம் இரவு நடந்த, ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், இந்தியன் வங்கி அணி, 95 - 61 என்ற புள்ளியில், சென்னை கஸ்டம்ஸ் அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில், தமிழக போலீஸ் அணி, அரை ஸ்டீல் அணியை வென்றது. அதேபோல், பெண்களுக்கான போட்டியில், அரைஸ் ஸ்டீல் அணி முதலிடத்தையும்; ரைசிங் ஸ்டார் அணி இரண்டாவது இடத்தையும்; இந்துஸ்தான் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.