ஆசிய விளையாட்டு போட்டி யில் தங்கப் பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மானுக்கு விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ஷூவை வழங்க இந்திய விளையாட்டு ஆணையம் நடவடிக்கை
ஆசிய விளையாட்டு போட்டி யில் தங்கப் பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மானுக்கு விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ஷூவை வழங்க இந்திய விளையாட்டு ஆணையம் நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

இந்தோனேஷியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் மகளி ருக்கான ஹெப்டத்லான் போட்டி யில் இந்திய வீராங்கனையான ஸ்வப்னா பர்மான் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பதக்கம் வென்றதும் அவர் தெரி வித்த வார்த்தைகள் இதுதான், தனது இரு கால்களிலும் உள்ள தலா 6 விரல்களால் சாதாரண ஷூவை அணிந்து விளையாடும் போது அதிக வலி ஏற்படுகிறது. இதை தாங்கிக் கொண்டுதான் நாட்டுக்கு பெருமை சேர்த்துள் ளேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்வப்னா பர்மானுக்கு விஷேசமாக வடி வமைக்கப்பட்ட ஷூவை வழங்க இந்திய விளையாட்டு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்து இந்திய விளையாட்டு ஆணையத்தின் பொது இயக்குநர் நீலம் கபூர் கூறுகையில், “ஸ்வப்னாவின் நிலை பற்றி தெரிந்ததும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உடனடியாக எங்களை நேரடியாக தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதுதொடர்பாக நாங்கள் அடிடாஸ் நிறுவனத் திடம் பேசினோம். அவர் கள் பிரத்யேக ஷூ தயாரித்து வழங்க ஒப்புக்கொண்டனர்” என்றார்.

பயிற்சியாளர்

இதுகுறித்து ஸ்வப்னாவின் பயிற்சியாளர் சுபாஷ் சர்க்கார் கூறுகையில், ,ஸ்வப்னாவுக்கு பிரத்யேக ஷூ தயார் செய்வது தொடர்பாக இந்திய விளையாட்டு ஆணையம் தரப்பில் சில விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. ஸ்வப்னா தற்போது காயம் அடைந்துள்ளார். இதுவரை நான் அவரை சந்திக்கவில்லை. விரைவில் ஸ்வப்னாவை சந்தித்த பின்னர் தேவையான விவரங்களை வழங்குவேன். ஆசிய போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே ஸ்வப்னாவுக்கு பிரத்யேக ஷூ ஏற்பாடு செய்து கொடுக்குமாறு இந்திய விளையாட்டு ஆணையத்திடம் கேட்டோம்.

ஆனால் தற்போது ஆசிய விளையாட்டு போட்டியில் அவர், தங்கப் பதக்கம் வென்றதும் எங்களது கோரிக்கைக்கு பலன் கிடைத்துள்ளது. தங்கப் பதக்கம் வென்ற பிறகு ஸ்வப்னா பிரபலமாகி விட்டார். பல்வேறு நிறுவனங்கள் அவரை தொடர்பு கொள்கின்றன” என்றார். - பிடிஐஸ்வப்னாவுக்கு பிரத்யேக ஷூ ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டோம். ஆனால் தற்போது ஆசிய விளையாட்டு போட்டியில் அவர், தங்கப் பதக்கம் வென்றதும் எங்களது கோரிக்கைக்கு பலன் கிடைத்துள்ளது.

© 2017 All Rights Reserved. Powered by