புளூ ஸ்கை' கிரிக்கெட் அகாடமி சார்பில், 'லீக்' கோப்பை போட்டியில் பங்கேற்க அழைப்பு


சென்னையில் நடக்க உள்ள, 'டி - 20 லீக்' கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க, அணி
களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


சென்னையில் உள்ள, 'புளூ ஸ்கை' கிரிக்கெட் அகாடமி சார்பில், 'லீக்' கோப்பை - 2018 என்ற, டி- 20' கிரிக்கெட் போட்டி, சென்னையில், 13ம் தேதி துவங்க உள்ளது.'ஓபன்' முறையில், ஒரு மாதம் போட்டிகள் நடைபெறுவதால், 6 முதல் 60 வயதினர் வரை உள்ள அணிகள், போட்டியில் பங்கேற்கலாம்.


போட்டிகள், வார இறுதி நாட்களாக, சனி மற்றும் ஞாயிறும், அரசு விடுமுறை நாட்களில் மட்டும், சென்னையில் உள்ள பல்வேறு பள்ளி மற்றும் கல்லுாரி வளாகத்தில் நடைபெறும்.போட்டிகள், லீக் முறையில் மட்டும் நடக்கும். முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு, கோப்பையும் வழங்கப்பட உள்ளது. பங்கேற்க விரும்பும் அணிகள், தங்கள் விபரங்களை, 10ம் தேதிக்குள், பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 98409 60992, 98415 90992 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.