பாரா ஆசிய பதக்கம் வென்ற தமிழக வீரர்!
3வது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடந்து வருகின்றன. இதன் ஆடவர் பிரிவுக்கான 200மீ ஓட்டத்தில், தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த ஆனந்தன் குணசேகரன், பந்தய தூரத்தை 24.45 நொடிகளில் கடந்து மூன்றாமிடம் பிடித்து வெண்கலம் வென்றார். இவர், இந்த ஆண்டுக்கான தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், 200மீ பிரிவில் தங்கமும் 400மீ பிரிவில் வெள்ளியும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிருக்கான கிளப் எறிதலில், இந்திய வீராங்கனை ஏக்தா ப்யான் 16.02மீ தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். இது இந்தியாவின் நான்காவது தங்கப்பதக்கம் ஆகும். 

இன்று நடந்துவரும் போட்டியில் மகளிருக்கான 200மீ ஓட்டத்தில் ஜெயந்தி பெஹ்ரா, 200மீ ஓட்டத்தில் ஆனந்தன் குணசேகரன், குண்டு எறிதலில் மோனு கங்காஸ் ஆகிய 3 இந்தியர்கள் வெண்கலம் வென்றுள்ளனர்.