சென்னை கால்பந்து வீரர் ஸ்பெயினில் பயிற்சிசென்னையை சேர்ந்த கால்பந்து வீரர் பிஜே ரெக்ஸ் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடை பெறும் வீரர்கள் தேர்வு முகா முக்கு தேர்வாகி அங்கு பயிற்சி பெற்று வருகிறார்.

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள யுஇ சான்ட்ஸ் கால் பந்து கிளப்புக்கான வீரர்கள் தேர்வு முகாமுக்கான தேடுதல் வேட்டை சென்னையில் சமீபத் தில் நடைபெற்றது. அந்த கிளப் பின் பயிற்றுவிப்பாளரான ரவி நிஷான் தஸ்வானி நடத்திய இந்த முகாமில் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வேயின் சூப்பர் டிவி ஷன் கால்பந்து அணி வீரரான 20 வயதான பிஜே ரெக்ஸ் தேர் வானார்.

இதையடுத்து பார்சிலோனா சென்றுள்ள ரெக்ஸ், அங்கு சுமார் 60 நாட்கள் நடைபெறும் தேர்வு முகாமில் கலந்து கொண்டுள் ளார். இந்த முகாமில் லீக் ஆட்டங் கள், பல்வேறு கட்ட பயிற்சிகள் நடைபெறுகின்றன. இதில் உயர் மட்ட செயல்திறனை வெளிப் படுத்தும் பட்சத்தில், ரெக்ஸை ஸ்பெயினில் உள்ள கால்பந்து கிளப்களில் ஏதேனும் ஒன்று ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளது. அவ்வாறு தேர்வாகும் பட்சத்தில் ஸ்பெயினில் ஒருவருட காலம் தங்கி மேலும் கடினமான பயிற்சி களை பெற முடியும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ பயின்று வரும் பிஜே ரெக்ஸ், தனது பள்ளிக்கால படிப்பை சென்னையில் உள்ள எஸ்பிஓஏ பள்ளியில் பயின்றார். கடந்த 2014-ம் ஆண்டு அவர் இடம் பெற்ற எஸ்பிஓஏ கால்பந்து அணி பெங்களூருவில் நடைபெற்ற தேசிய இளைஞர் கால்பந்து போட்டியில் பட்டம் வென்றது. சிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கா கோப்பையிலும் ரெக்ஸ் விளை யாடி உள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற வீரர்கள் தேர்வு முகாமிலும் இதற்கு முன்னர் ரெக்ஸ் கலந்து கொண்டுள் ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு கோவாவில் கிராமப்புற இளை யோர் விளையாட்டு மற்றும் இந்திய விளையாட்டு ஒருங் கிணைப்பு சார்பில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் பிஜே ரெக்ஸ் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். ரோட்டர்அக்ட் கிளப் சார்பில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதையும் ரெக்ஸ் பெற்றிருந்தார்.