தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம் (சென்னை) பொதுக்குழு தீர்மானங்கள்:


2020-2021 2021 தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம் (சென்னை) பொதுக்குழு தீர்மானங்கள்: 1.  வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி நிறுவனங்கள் உடனடியாக பணியையும் ஊதியத்தையும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2.  DPI யில் உள்ள மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தில் உரிய குழுக்கள் அமைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கி அவர்களுக்கு அடிப்படை ஊதிய நிர்ணயம் செய்யப்பட வேண்டும் ஆண்டுதோறும் ஒரு குறைந்தபட்ச ஊதிய உயர்வு வழங்கிட ஆவணம் செய்ய வேண்டும். 3. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு பணிக்கொடை (கிராஜுவிட்டி )வழங்க வேண்டும் என்பது விதிமுறையாகும்  இதை தனியார் பள்ளிகள் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். 4.  அரசு பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். 5.  அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பதவி உயர்வு அளிப்பதில் சாதி சமய வேறுபாடுகள் அதிகமாக உள்ளது அவற்றை களைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 6.  பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை போன்று சமமான ஊதியத்தை உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும். 7.  அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு என்று உரிய தேர்வுகள் நடத்தி அவர்களையும் முழுநேர  பணியாளர்களாக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 8.  2013 -TET ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  மதிப்பெண் மற்றும் வயது மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும் இதுவரை TET தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்கிய பிறகுதான் மீண்டும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும்.  9.  அரசு ஆசிரியர் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 என்ற புதிய அரசு ஆணையை உடனே ரத்து செய்ய வேண்டும். 10.  அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ மாணவிகளின் உடல் மற்றும் மனவலிமையை வளர்த்திட  உடற்கல்வி மற்றும் யோகாவை கட்டாய பாடமாக்கிட வேண்டும். 11.  அனைத்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் 50 சதம் பதிவுமூப்பு அடிப்படையிலும் 50 சதம் தேர்வு அடிப்படையிலும் பணி நியமனம் செய்ய வேண்டும் . 12.  ஏழை எளிய மாணவ மாணவிகளின்  எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு & அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்பிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 13. சிறந்த பள்ளி நிர்வாகிகள், கொடையாளர்கள், சிறந்த பொதுத் தொண்டு ஆற்றுபவர்கள், செம்மல்கள் , போன்றோரை தேர்ந்தெடுத்து சங்கத்தின் சார்பாக 'விருதுகள் 2020-2021' வழங்கி சிறப்பு செய்யப்படும். சங்கம் (சென்னை) பொதுக்குழு தீர்மானங்கள்: 1.  வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி நிறுவனங்கள் உடனடியாக பணியையும் ஊதியத்தையும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2.  DPI யில் உள்ள மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தில் உரிய குழுக்கள் அமைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கி அவர்களுக்கு அடிப்படை ஊதிய நிர்ணயம் செய்யப்பட வேண்டும் ஆண்டுதோறும் ஒரு குறைந்தபட்ச ஊதிய உயர்வு வழங்கிட ஆவணம் செய்ய வேண்டும். 3. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு பணிக்கொடை (கிராஜுவிட்டி )வழங்க வேண்டும் என்பது விதிமுறையாகும்  இதை தனியார் பள்ளிகள் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். 4.  அரசு பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். 5.  அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பதவி உயர்வு அளிப்பதில் சாதி சமய வேறுபாடுகள் அதிகமாக உள்ளது அவற்றை களைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 6.  பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை போன்று சமமான ஊதியத்தை உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும். 7.  அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு என்று உரிய தேர்வுகள் நடத்தி அவர்களையும் முழுநேர  பணியாளர்களாக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 8.  2013 -TET ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  மதிப்பெண் மற்றும் வயது மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும் இதுவரை TET தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்கிய பிறகுதான் மீண்டும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும்.  9.  அரசு ஆசிரியர் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 என்ற புதிய அரசு ஆணையை உடனே ரத்து செய்ய வேண்டும். 10.  அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ மாணவிகளின் உடல் மற்றும் மனவலிமையை வளர்த்திட  உடற்கல்வி மற்றும் யோகாவை கட்டாய பாடமாக்கிட வேண்டும். 11.  அனைத்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் 50 சதம் பதிவுமூப்பு அடிப்படையிலும் 50 சதம் தேர்வு அடிப்படையிலும் பணி நியமனம் செய்ய வேண்டும் . 12.  ஏழை எளிய மாணவ மாணவிகளின்  எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு & அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்பிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 13. சிறந்த பள்ளி நிர்வாகிகள், கொடையாளர்கள், சிறந்த பொதுத் தொண்டு ஆற்றுபவர்கள், செம்மல்கள் , போன்றோரை தேர்ந்தெடுத்து சங்கத்தின் சார்பாக 'விருதுகள் 2020-2021' வழங்கி சிறப்பு செய்யப்படும்.