SRMJEEE 2021 Registration begins for B. Tech courses


SRM Institute of Science and Technology (SRMIST), Kattankulathur, (earlier known as SRM University) begins the online registration process for its B.Tech entrance exam, SRMJEEE (SRM Joint Engineering Entrance Examination). Qualifying in SRMJEEE provides entry to all the campuses of SRMIST located at Kattankulathur (Main Campus), Vadapalani, Ramapuram, and Delhi – NCR; SRM University, Andhra Pradesh; SRM University, Sonepat– Haryana and SRM University, Sikkim. For further details visit www.srmist.edu.in. எஸ்ஆர்எம் ல் பி.டெக் பொறியியல் பட்ட படிப்பில் சேர நுழைவுத்தேர்வு(SRMJEEE- 2021)-- ஆன்லைன் விண்ணப்பம் விநியோகம் தொடக்கம் - வேந்தர் டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர் தகவல் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (முன்னாள் எஸ்ஆர்எம் பல்கலைகழகம்) 2021ம் ஆண்டில் பி.டெக் பொறியியல் பட்ட படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வில் (SRMJEEE- 2021) பங்கேற்க www.srmist.edu.in என்ற இணையதளத்தில் உள்ள நுழைவுத்தேர்வு விண்ணபத்தின் மூலம் மாணவ மாணவியர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன (SRMIST SRM Institute of Science and Technologe) வேந்தர் டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: நாட்டில் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான முன்னாள் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (SRMIST SRM Institute of Science and Technologe) காட்டாங்கொளத்தூர் மெயின் வளாகம், வடபழனி, ராமாபுரம் வளாகங்கள், டெல்லி என்சிஆர் வளாகம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் ஏ.பி. ஆந்திரபிரதேசம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சோனாபட் ஹரியானா, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சிக்கிம் ஆகிய வளாகங்களில் 2021ம் ஆண்டில் பி.டெக் பொறியியல் பட்டப்பில் சேருவதற்காக அனைத்து வளாகங்களுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு 2021ம் ஆண்டு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட உள்ளது. நாட்டில் உள்ள 127 நகரங்கள் மற்றும் துபாய், தோகா,மஸ்கட், பஹ்ரைன், மற்றும் குவைத் ஆகிய 5 வெளிநாடுகளில் அமைக்கபட்டுள்ள மையங்களில் நடைபெறுகிறது. நுழைவுத்தேர்வு மற்றும் அட்மிஷன் கவுன்சிலிங் தேதிகள் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE All India Council for Technical Education) மற்றும் பல்கலைக்கழக மான்யகுழு (UGC University Grants Commission) மற்றும் அரசின் அறிவிப்பு படி நடைபெறும். கடந்த ஆண்டு பி.டெக் பொறியியல் பட்ட படிப்பில் சேர 1.52லட்சம் மாணவமாணவியர் விண்ணபித்தனர். ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் பங்கேற்க எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் ஏ.பி.ஆந்திரபிரதேசம் வளாகம் தவிர்த்து மற்ற வளாகத்தில் சேர மாணவ மாணவியர் +2 தேர்வில் கணிதம், இயற்பியல், ரசாயனம்/உயிரியல் பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் ஏ.பி.ஆந்திரபிரதேசம் வளாகத்தில் சேர கணிதம், இயற்பியல், ரசாயனம் பாடங்களில் குறைந்தபடசம் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்த நுழைவுத்தேர்வில் பங்கேற்க www.srmist.edu.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணபத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அட்மிஷன் நுழைவுத்தேர்வ ரேங்க் அடிப்படையில் வழங்கப்படும் எஸ்ஆர்எம் ல் பி.டெக் பொறியியல் பட்ட படிப்பில் சேரவிரும்பும் அயல்நாட்டு வாழ் இந்திய (NRI) மாணவர்கள் SRMEEE நுழைவுத்தேர்வு மூலம் தகுதி பெறும் பட்சத்தில் வழக்கமான அதற்குரிய சலுகை கட்டண மூலம் சேர வாய்ப்பு பெறுவர்.நுழைவுத்தேர்வில் பங்கேற்காமல் சர்வதேச பிரிவு வாய்ப்பு மூலம் நேரிடையாக சேர விரும்புவர்கள் அதற்குரிய சர்வதேச கல்வி கட்டணப்படி சேரலாம். சர்வதேச அளவில் முன்னணி கார்பரேட் நிறுவனங்களான மைக்ரோசாப்ட், அமேசான், ஐபிஎம்,சிஸ்கோ,சிமென்ஸ், பேஃபால், அசென்ச்சர், ஹாலெட் பேக்கர்ட், டிசிஎஸ், இன்போசிஸ், காக்னிசன்ட்,விப்ரோ, ஏபிபி, எல்&டி,போர்ட்,டிவிஎஸ், ஸ்னைடர், ரெனால்ட் நிசான், ஷெர்னர், ஜி.டி.ஸ்டேர்டிஜிஸ், பயோகிளினிகா, ஜிப்போ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஆண்டுதோறும் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்வதற்காக எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திற்கு வருகை தந்து வளாக தேர்வு மூலம் மாணவமாணவியரை நல்ல ஊதியத்துடன் தேர்வு செய்து வருகின்றன. அதன்படி கடந்தாண்டு 625க்கும் அதிகமான நிறுவனங்கள் நடத்திய வளாக பணியாளர் தேர்வு மூலம் 8500க்கும் அதிகமான மாணவ மாணவியரை அதிக ஊதியத்துடன் தேர்வு செய்தனர். இவ்வளவு பேர்கள் பணிக்காக தேர்வு செய்யப்பட்டது நாட்டில் வேறு எந்த பல்கலைகழகத்திலும் நிகழாத ஒரு சாதனையாகும். அதிலும் ஒரு நிறுவனம் ஆண்டுக்கு ரூ.41.6 லட்சம் சம்பளத்தில் பணி நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தாண்டு கல்வி உதவி தொகை மற்றும் கல்வி கட்டண சலுகை உதவித்தொகையாக ரூ.35 கோடி வழங்கியுள்ளது என வேந்தர் வெளியிட்டுள்ள அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.