கிராமங்களில் விளையாட்டு மைதானம் உருவாக்கி விளையாட்டு வீரர்களை உருவாக்கி வரப்படுகிறது.


பி.ராஜா,மாவட்ட விளையாட்டு அலுவலர், விருதுநகர்விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்நோக்கம் என்ன- விளையாட்டுக்களில் இளம் வீரர், வீராங்கனைகளை உருவாக்கி மாவட்ட, மாநில, தென் மாநில, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்து விளையாட்டில் இந்தியாவை உலகளவில் முதலிடத்தில் மிளிரச் செய்வதான் நோக்கம்.என்னென்ன விளையாட்டுகள் கற்பிக்கப்படுகிறது.- தடகளம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன், பால் பேட்மின்டன், கிரிக்கெட், கபாடி, கூடைப்பந்து, வலைகோள் பந்து, வாலிபால், நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுக்கள் கற்பிக்கப்படுகிறது.போதுமான பயிற்சியாளர்கள் உள்ளனரா.- பயிற்சியாளர் பற்றாக்குறை உள்ளது. கூடுதல் பயிற்சியாளர்களை நியமிக்கும்படி அரசிடம் கோரப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் விளையாட்டு மைதானம் முழுபயன்பாட்டிற்கு வந்துள்ளதா.- மாவட்ட, தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது.நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறதா.- கொரோனா தொற்று பரவலால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனினும் விதிமுறைகளுக்கு உட்பட்டு மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.விளையாட்டு பயிற்சிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா.- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒவ்வொரு விளையாட்டிற்கும் பயிற்றுனர்களை நியமித்து பள்ளி, கல்லுாரி மற்றும் பொது மக்களுக்கு அந்தந்த விளையாட்டுக்களில் இலவச பயிற்சி அளித்து அனைத்து விளையாட்டுக்களையும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருபாலருக்கான விடுதி வசதி உள்ளதா.- இல்லை. இருபாலருக்கான விடுதிகள் விரைவில் கட்டப்படவுள்ளது.இளம் வீரர், வீராங்கனைகளை எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது.- அனைத்து பள்ளிகளில் 6,7,8 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உடல் திறனாய்வு நடத்தி தேர்வு பெற்றவர்களுக்கு போட்டிகள் நடத்தி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.கோடை விடுமுறையில் விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறதா.- கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் பொருட்டு ஆண்டு தோறும் 30 நாள், 60 நாள் கோடை விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தி இளம் வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தி வருகிறோம். வரும் ஆண்டில் கோடை விளையாட்டு முகாம் நடத்துவது குறித்து அரசின் முடிவுக்கு ஏற்ப அறிவிக்கப்படும்.விளையாட்டு போட்டிகள் பங்கேற்பது எப்படி.- மாவட்ட அளவில் தடகளம், கபாடி, கேரம், சைக்கிள் போட்டி என ஏராளமான போட்டிகள் நடத்தப்படுகிறது. அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி, முதல்வர் கோப்பைக்கான போட்டி நடத்தப்பட்டு மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.உடற் கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்படுமா.- கூடுதல் பயிற்சி அளிக்கும் பொருட்டு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்ன.- விளையாட்டுப்பள்ளி, விளையாட்டு விடுதியில் சேர மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் நடத்துவது, மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நடத்துதல், உலக உடற் திறனாய்வு திட்டத்தை செயல்படுத்துவது.உயர் கல்வி, அரசு வேலையில் சேர விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா.- விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை கொட்டிக்கிடக்கிறது. இன்ஜினியரிங், எம்.பி.பி.எஸ்., எனஉயர் கல்வி பயில விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அரசு வேலைக்கும் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை உண்டு.விளையாட்டு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறதா.- மாநில அளவில் விளையாட்டு உபகரங்கள் வாங்க ரூ.66 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் மூலம் கிராமங்களில் விளையாட்டு மைதானம் உருவாக்கி விளையாட்டு வீரர்களை உருவாக்கி வரப்படுகிறது. தொடர்புக்கு 04562 -- 252 947.