டேபிள் டென்னிஸ் - திவ்யதேஷ் பாண்டே, சாம்பியன்


அகில இந்திய டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில், திவ்யதேஷ் பாண்டே, சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.


இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ.,) சார்பில், 48வது அகில இந்திய நிறுவனங்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி, பாரதியார் பல்கலையில் நடந்தது. ஆண், பெண், ஜூனியர் மாணவ, மாணவிகள் என, நான்கு பிரிவுகளில் போட்டி நடந்தன.


அகில இந்திய எலக்ட்ரிசிட்டி ஸ்போர்ட்ஸ் கன்ட்ரோல் போர்டு, கனரா வங்கி, எல்.ஐ.சி.,

ஏர் இந்தியா, தேனா வங்கி, பி.எஸ்.என்.எல்., ஆர்.பி.ஐ., தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு அமைச்சகம், ரயில்வே உள்ளிட்ட, 21 அணிகளிலிருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப்போட்டியில், பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் புரமோஷன் போர்டு அணியின் திவ்யதேஷ் பாண்டே, அர்ச்சனா கிரீஷ் கமத் ஆகியோர் மோதினர். திவ்யதேஷ் பாண்டே, 4-3 என்ற செட் கணக்கில்,அர்ச்சனா கிரீஷ் கமத் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். ஆண்கள் பிரிவில் சத்யன், 4-3 என்ற செட் கணக்கில் ஹர்மிட் தேசாயை வென்றார்.