மகளிர் கபடி: எஸ்.டி.ஏ.டி., சாம்பியன்


:ராணி மேரி கல்லுாரியில் நடந்த, ஓபன் மகளிர் கபடி போட்டியில், தர்மபுரி, எஸ்.டி.ஏ.டி., அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.கபடி ஸ்டார் மற்றும் ராணி மேரி கல்லுாரி சார்பில், சென்னை ஓபன் மகளிர் கபடி போட்டி, மயிலாப்பூரில் உள்ள கல்லுாரி வளாகத்தில், அக்., 4ல் துவங்கி,சமீபத்தில் நிறைவடைந்தது.இதில் எத்திராஜ், கபடி ஸ்டார், தமிழ்நாடு போலீஸ், ராணி மேரி கல்லுாரி, சாய், தமிழ் தலைவாஸ், மீனம்பாக்கம், ஏ.எம்.ஜெயின் கல்லுாரி உள்ளிட்ட, 24 அணிகள் பங்கேற்றன.'நாக் - அவுட் மற்றும் லீக்' முறையில் நடந்த போட்டிகளில், தர்மபுரியைச் சேர்ந்த, எஸ்.டி.ஏ.டி., அணி முதலிடத்தையும், சென்னையைச் சேர்ந்த கபடி ஸ்டார் அணி இரண்டாவது இடத்தையும், தமிழக போலீஸ் அணி, மூன்றாவது இடத்தையும் பிடித்தன.