செயின்ட் ஜோசப் கல்லுாரியில் சர்வதேச, 'பிடே' ரேட்டிங் சதுரங்க போட்டி Rajarishi Karthi wins St. Joseph’s 8th international fide rating chess tournament trophy.


செயின்ட் ஜோசப் கல்லுாரியில் நடந்த சர்வதேச, 'பிடே' ரேட்டிங் சதுரங்க போட்டியில், முதல், 40 இடங்களை பிடித்த தமிழக வீரர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது.


இந்திய சதுரங்க கூட்டமைப்பு, தமிழ்நாடு சதுரங்க சங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க சங்கம் ஆதரவுடன், செம்மஞ்சேரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி சார்பில், 8வது சர்வதேச, 'பிடே' ரேட்டிங் சதுரங்க போட்டி, கல்லுாரி வளாகத்தில், ஜுலை, 8ல் துவங்கி, நேற்று முன்

தினம் நிறைவடைந்தது.


தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், டில்லி, கேரளா, கர்நாடகா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த, சர்வதேச ரேட்டிங் பெற்ற, 212 வீரர்கள் உட்பட, 277 வீரர்கள் பங்கேற்றனர். 'லீக்' முறையில் நடந்த போட்டியில், அதிக புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடித்த, சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த ராஜரிஷி கார்த்திக்குக்கு, 35 ஆயிரம் ரூபாய் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.


அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், இரண்டாம் இடம் பிடித்து, 30 ஆயிரம் ரூபாயை பரிசாக வென்றார்.அதோடு, மொத்த பரிசு தொகையான, 2 லட்சம் ரூபாயை, முதல் 40 இடங்களைப் பிடித்த தமிழக வீரர்களுக்கு, கல்லுாரி சார்பில் பகிர்ந்து அளிக்கப்பட்டது. கல்லுாரி தலைவர் பாபு மனோகரன், பரிசுகளை வழங்கினார்.St. Joseph’s 8th international fide rating chess tournament valedictory function was held at St. Joseph’s Institute of Technology, OMR, Chennai- 119. Under the aegis of All India Chess Federation, Tamil Nadu State Chess Association, on 11 th July. 277 players including 212 International Rated Players from UP, West Bengal, Delhi, Maharastra, Andaman, Telangana, Kerala, Karnataka, Pondicherry and Tamil Nadu had participated for this competition. Top players including Grand Master Laxman R.R of Railway, International Master Balasubramaniam of ICF, Saravana Krishnan P of Karur Vysya Bank, Kunal from Neyveli and Ram S. Krishnan of BSNL, were scored full points in the first round of the 8th St. Joseph’s Chess Tournament against lesser seeded opponents. This is the eighth edition of the St. Joseph's international rating Chess tournament and the prize money was Rs- 2 Lakhs for the top 40 players. Winners list has been attached Chief Guests 1. Dr. B. BABU MANOHARAN - Chairman - St. Joseph's Group of Institutions distributed the cash prize and trophy to the winners of the tournament. 2. Mrs. B. JESSIE PRIYA, M.Com., Managing Director - St. Joseph’s Group of Institutions, 3. Mr.B. SHASHI SEKAR, M.Sc., Director - St. Joseph’s Group of Institutions. Presided over the function.