தேசிய ஜூனியர் தடகளத்தில் 2-ம் இடம் பிடித்தது தமிழகம்


திருப்பதியில் நடைபெற்ற 16-வது தேசிய ஜூனியர் தடகள போட்டி யில் தமிழகம் 2-ம் இடம் பிடித்தது.

திருப்பதியில் உள்ள தாரக ராமா விளையாட்டு மைதானத் தில் கடந்த 1-ம் தேதி 16-வது தேசிய ஜூனியர் தடகள போட்டி தொடங்கியது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 28 மாநிங் களைச் சேர்ந்த 4,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து மொத்தம் 355 பேர் இந்தத் தொடரில் கலந்து கொண்டனர்.

3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 7 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலத்துடன் மத்திய பிரதேச மாநிலம் பதக்க பட்டியலில் முதலிடம் பெற்றது.

4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களை பெற்ற தமிழகம் பதக்க பட்டியலில் 2ம் இடம் பெற்றது.

போட்டிகளை நடத்திய ஆந்திரா, 2 தங்கம், 1 வெண்கலத் துடன் 8-ம் இடம் பிடித்தது. இந்தத் தொடரில் மொத்தம் 12 புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷர்மிளா, குண்டு எறிதல் போட்டியில் 13.75 மீட்டர் தூரம் வரை எறிந்து புதிய சாதனை யை நிகழ்த்தினார். வெற்றி பெற்றவர்களுக்கு சித்தூர் எம்.பி. சிவபிரசாத், மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா ஆகி யோர் பதக்கங்களை வழங்கி கவிரவித்தனர்.