விளையாட்டு அரங்கம் திறப்பு


தேனி பூதிபுரம் ரோட்டில் 50 விதமான விளையாட்டுக் கருவிகள் கொண்ட ஆடுகளம் என்ற விளையாட்டு அரங்கம் துவங்கப்பட்டுள் ளது.

தேனி சாந்தி நிகேதன் பள்ளி நிர்வாகி பிரபாகரன், வேலம்மாள் பள்ளி நிர்வாகி கணேஷ் நடராஜன், கம்பம் ஆர்.ஆர்., பள்ளி சேர்மன் ராஜாங்கம், மேரி மாதா பள்ளி முதல்வர் சினு ஜோசப், முத்துத்தேவன்பட்டி நாடார் மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் ஜெகநாதன் துவக்கி வைத்தனர். வர்த்தகர்கள் சிவக்குமார், மாரிமுத்து, சுரேஷ், செந்தில்குமார், முருகன், வீரமணி, ரவி, ஜெகன், ஜவஹர், பாலமுருகன், மகேந்திரன், தங்கத்துரை, நடராஜன் பங்கேற்றனர். பங்குதாரர் ஜெயக்குமார், தனலட்சுமி, சின்னன், சோமசுந்தரம் ஏற்பாடுகளை செய்தனர்.