புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. Kabaddi festival kicks off in chennai


இதுவரை நடைபெற்ற 5 சீசன்களில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பாட்னா அணி, இந்த ஆண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்க உள்ளது. 

3 மாதங்கள்...12 அணிகள்...1 கோப்பை.. சென்னையில் தொடங்கும் ப்ரோ கபடி அதகளம்..! #VivoProKabaddi

`ஐ.பி.எல் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சிதைத்துவிட்டது’ என சமீபத்தில் காட்டமாகப் பேசியிருந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கார்ல் ஹூப்பர். எல்லா League-களும் விளையாட்டை மேம்படுத்தவே நடத்தப்படுகிறது என்றாலும், எல்லா League-களும் விளையாட்டை மேம்படுத்துவதில்லை. ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கும் ஐ.எஸ்.எல் முன், இன்னும் ஆயிரம் ஆயிரம் சவால்கள் காத்திருக்கின்றன. ஆனால், லீக் தொடங்கிய நாள் முதல் இன்று வரை ப்ரோ கபடி லீக், இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் ஒரு லீக்கின் வெற்றி. 

அந்த வரிசையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ப்ரோ கபடி லீக் 6-வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது. 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ப்ரோ கபடி லீக், இந்தியா மட்டுமில்லாமல் ஈரான், தென் கொரியா என வெளிநாடுகளிலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அக்டோபர் 7-ம் தேதி தொடங்கும் போட்டிகள், ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெற உள்ளன. மூன்று மாதங்களுக்கு தொடர் கபடி ஆக்‌ஷன் கொண்டாட்டம் களைகட்ட உள்ளது.

களத்தில் யார்?

முதல் நான்கு சீசன்களில் 8 அணிகள் பங்கேற்றன. 2017-ம் ஆண்டு முதல் குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு  ஆகிய நான்கு அணிகள் இந்தத் தொடரில் இடம் பிடித்தன. எனவே, மொத்தம் 12 அணிகளுடன் 2018 ப்ரோ கபடி லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. 

ப்ரோ கபடி

12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு  அணியும், அதே பிரிவில் இருக்கும்  மற்ற அணிகளுடன் 3 போட்டிகளில் விளையாட வேண்டும். மற்ற பிரிவில் இருக்கும் 6 அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். மொத்தம் 15 இன்ட்ரா ஜோன் போட்டிகளும், 6 இன்ட்டர் ஜோன் போட்டிகளும், ஒரு வைல் கார்டு போட்டியும் நடைபெறஉள்ளன. இரண்டு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள், ப்ளே- ஆப் சுற்றுக்கு முன்னேறும். 

காஸ்ட்லி கபடி!

ப்ரோ கபடி லீக் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம், முதல் முறையாக கோடிகளை எட்டியுள்ளது. 2017-ம் ஆண்டு அதிகபட்சமாக 93 லட்சம் ரூபாய்க்கு நிதின் தோமர் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்த ஆண்டு, 6 வீரர்கள் ஒரு கோடிக்கும் அதிகமான ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். மோனு கோயத், ரிஷாங்க் தேவடிகா, ராகுல் சவுத்ரி, தீபக் ஹூடா, தோமர், ஃபசல் ஆகியோர் இந்த ஆண்டு ப்ரோ கபடி லீக் தொடரின் காஸ்ட்லி நாயகர்கள்!

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

இதுவரை நடைபெற்ற 5 சீசன்களில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பாட்னா அணி, இந்த ஆண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்க உள்ளது. 

பர்தீப் நர்வால்

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈரான் அணி கபடியில் தங்கம் வென்றது. ஈரானின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அமிர் கோலம்ரிசா மசண்டரானிதான் இப்போது மும்பை அணியின் பயிற்சியாளர். எனவே, கோப்பையை வெல்ல மும்பை அணி தயாராகி வருகிறது. மேலும், ப்ரோ கபடி லீக்  அணிக்கு வெளிநாடு பயிற்சியாளர் பயிற்சி அளிப்பது இதுவே முதல்முறை.

கடந்த ஆண்டு முதல்முறையாகக் களம் இறங்கிய குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு, கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் தலைவாஸ் 

சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள  தமிழ் தலைவாஸ் அணி, ப்ரோ கபடி லீக் தொடரில் கடந்த ஆண்டு எண்ட்ரியானது. இளைஞர்கள் இருந்தும் அனுபவமிக்க வீரர்கள் குறைவாக இருந்ததால், க்ரூப் ஸ்டேஜ் நிலையில் இறுதி இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தது. எனவே, இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சீனியர் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கால்பந்தில் சென்னையின் எஃப்.சி வரிசையில், தமிழ் தலைவாஸ் கோப்பை வெல்லுமா என்று தமிழ்நாடு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்!

புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதன் அறிமுக போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், 2015-ம் ஆண்டில் மும்பை அணியும் சாம்பியன் பட்டம் வென்றன. பாட்னா பைரட்ஸ் அணி தொடர்ச்சியாக 3 முறை (2016 ஜனவரி, 2016 ஜூன், 2017) சாம்பியன் பட்டம் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது.
 
Sponsored by Revcontentஇந்த நிலையில் மொத்தம் ரூ.8 கோடி பரிசுத் தொகைக்கான 6-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. சென்னை சுற்று ஆட்டங்கள் வருகிற 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை அடுத்து சோனிபட், புனே, டெல்லி, கொல்கத்தா உள்பட 10 இடங்களில் போட்டி அரங்கேறுகிறது. இதில் பங்கேற்கும் 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு தலா 22 லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

சென்னையில் இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பர்தீப் நார்வால் தலைமையிலான பாட்னா பைரட்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

தமிழ் தலைவாஸ் அணி கடந்த ஆண்டு இந்த போட்டியில் முதல்முறையாக களம் கண்டது. 22 லீக் ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 6 வெற்றி, 14 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் கடைசி இடத்தை பெற்றது. உள்ளூரில் நடந்த 6 ஆட்டங்களிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி கண்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. அந்த அணியின் கேப்டன் அஜய் தாகூர் ஒட்டுமொத்தமாக 222 புள்ளிகள் குவித்தாலும், அவருக்கு பக்கபலமாக மற்ற வீரர்கள் யாரும் செயல்படவில்லை. இந்த முறை தமிழ் தலைவாஸ் அணியில் அனுபவமும், திறமையும் வாய்ந்த மன்ஜீத் ஷிலார், ஜஸ்விர்சிங், அமித் ஹூடா, தர்ஷன் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளதால் அணி வலுப்பெற்றுள்ளது.

நடப்பு சாம்பியனும், தொடர்ந்து 3 முறை கோப்பையை வென்று சாதித்த பாட்னா பைரட்ஸ் அணியில் பர்தீப் நார்வால், தீபக் நார்வால், ஜெய்தீப், ஜவகர், விகாஸ் காலே உள்ளிட்ட சிறந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். உள்ளூரில் வெற்றியுடன் போட்டியை தொடங்க தமிழ் தலைவாஸ் அணி முழுமுயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் நடப்பு சாம்பியனுக்குரிய கம்பீரத்தை வெளிப்படுத்த பாட்னா பைரட்ஸ் அணி எல்லா வகையிலும் முயலும். வலுவான இரு அணிகளும் வெற்றிக்காக மல்லுக்கட்டும் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதே மைதானத்தில் இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் மும்பை-புனேரி பால்டன் அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டி தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
<button class="btn btn-xs btn-primary pull-right alpha-size1" style="font-family: inherit; font-style: inherit; font-variant: inherit; text-align: justify; color: rgb(255, 255, 255); font-stretch: inherit; line-height: 1.5; margin: 0px 0px 0px 10px; overflow: visible; cursor: pointer; vertical-align: middle; touch-action: manipulation; background-image: none; border-width: 1px; border-style: solid; border-color: rgb(46, 109, 164); white-space: nowrap; padding-top: 5px; padding-right: 5px; padding-left: 5px; border-radius: 3px; user-select: none; background-color: rgb(51, 122, 183); float: right; height: 22px;">ATamil Thalaivas will hope to get maximum points from its home leg, starting today.</button>