தென் மண்டல கால்பந்து ஜெ.ஜெ., பள்ளி சாம்பியன்


'ரிலையன்ஸ்' கோப்பைக்கான தென் மண்டல கால்பந்து போட்டியில், ஸ்ரீபெரும்பத்துார், ஜெ.ஜெ., அரசு ஆண்கள் பள்ளி அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


ஐதராபாதில் உள்ள, 'ரிலையன்ஸ் பவுண்டேஷன் யூத் ஸ்போர்ட்ஸ்' சார்பில், பள்ளி அணிகளுக்கு இடையிலான தென் மண்டல கால்பந்து போட்டி சமீபத்தில் நடத்தது. இதில், தமிழகம் உட்பட, பல்வேறு மாநிலங்களின் அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த அணிகள்பங்கேற்று விளையாடின.


நேற்று முன்தினம் நடந்த சீனியர் பிரிவிற்கான அரையிறுதிப் போட்டியில், ஸ்ரீபெரும்பத்துார், ஜெ.ஜெ., அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணி, 9 - 0 என்ற கோல் கணக்கில், ஐதராபாதைச் சேர்ந்த க்ளெண்டலே அகாடமி இன்டர்நேஷனல் பள்ளி அணியை தோற்கடித்தது.இறுதிப் போட்டியில் பங்கேற்ற அரசு பள்ளி அணி, 5 - 1 -என்ற கோல் கணக்கில், மங்களூரு கீரின்வுட் பள்ளி அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும், ஜெ.ஜெ., அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது குறிப்படத்தக்கது.