தேசிய வலையப்பந்து


தேசிய வலையப்பந்து போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த, 12 சிறுவர்கள் பங்கேற்கின்றனர்.இந்திய டென்னிகாட் சங்கம் மற்றும் மேற்கு வங்கம் டென்னிக்காட் சங்கம் சார்பில், 33வது, சப் - ஜூனியருக்கான வலையப்பந்து போட்டி, மேற்கு வங்கத்தில் உள்ள பர்த்டமான் பகுதியில், 9ல் துவங்க உள்ளது.


இந்த போட்டியில், தமிழ்நாடு டென்னிகாட் சங்கம் சார்பில், சிறுவர்களில், பி.அய்யப்பன், எஸ்.கார்த்திக் ராஜா, எஸ்.சுகிவர்மன் மற்றும்தமிழரசி, கே.யஷிகா, எஸ்.மாரீஸ்வரி உள்ளிட்ட, 12 பேர் பங்கேற்கின்றனர்.இவர்கள், சமீபத்தில் கேரளாவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.