Junior Super Kings T20 final phase from today-ஜேஎஸ்கே டி20 இறுதிகட்டத் தொடர் திருநெல்வேலியில் இன்று தொடக்கம்


பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 போட்டிகளுக்கான சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழா திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது. விழாவில் திருநெல்வேலி கிரிக்கெட் சங்கத் தலைவர் சண்முகம், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, முத்தூட் குழும தென் மண்டல மேலாளர் காந்த், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர். 

The final phase of the fifth edition of the Junior Super Kings (JSK) inter-school T20 championship, sponsored by The Muthoot Group and supported by TNCA, will be held at the ICL grounds in Sankar Nagar here from January 22.

The first phase was held in Chennai and 11 other districts, Coimbatore, Salem and Namakkal, Tiruchi, Vellore and Krishnagiri, Tirupur, Erode and Madurai, Tirunelveli and Thoothukudi.

The district winners and the top two finishers of the Chennai-leg will now clash for the honours.

Eight teams will be split into two groups of four each and each side will get to play three league games. The top two from each group will qualify for the semifinal followed by the final to be played under lights.

Player of the match awards will be presented for every match. There will also be special awards for the best bowler, batsman, player of the final and the tournament.

K.S. Viswanathan, CEO, CSK, S. Shanmugam, joint president-manufacturing, India Cements & TDCA president, S. Dakshinamoorthy, AVP, production & QA, India Cements & TDCA vice-president, zonal manager-TN South of The Muthoot Group N.S. Srikanth, were present at the launch.

பள்ளிகள் இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) கோப்பைக்கான டி 20 கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட போட்டிகள் திருநெல்வேலியில் இன்று தொடங்குகிறது.

முத்தூட் நிறுவனம் மற்றும் தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் பள்ளிகள் இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) கோப்பைக்கான டி 20 கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட போட்டிகள் திருநெல்வேலியில் உள்ள சங்கர் நகர் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் முதல் கட்ட தொடரில் 12 மாவட்டங்களில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 8 அணிகள் கலந்து கொண்டு மோத உள்ளன. இதில் கோப் பையை கைப்பற்றும் அணியே ஜூனியர் சூப்பர் கிங்ஸ் பட்டத்தை வெல்லும்.

வரும் 26-ம் தேதி வரை நடை பெறும் இந்தத் தொடரில் சென்னை யைச் சேர்ந்த செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, சாந்தோம் மேல்நிலைப் பள்ளி, சேலம் நீலாம்பாள் சுப்ர மணியம் மேல்நிலைப் பள்ளி, திருச்சி ரங்கம் ஆடவர் மேல் நிலைப் பள்ளி, திருப்பூர் பிளாட்டோ அகாடமி, வேலூர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி, கோவை ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் குலேசன் மேல்நிலைப் பள்ளி, மதுரை லீ சாட்லியர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த 8 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதி ஆட்டங்கள் 25-ம் தேதியும், இறுதிப் போட்டி 26-ம் தேதி தேதியும் நடைபெறு கின்றன.

இந்தத் தொடரின் லீக் மற்றும் அரை இறுதி ஆட்டங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சானலில் ஒரு மணி நேர தொகுப்பாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. அதேவேளையில் மின்னொளியில் நடைபெறும் இறுதி ஆட்டத்தை முழுவதுமாக 27-ம் தேதி ஒளிபரப்ப உள்ளனர்.

தொடக்க நாளான இன்று காலை 9 மணிக்கு ஐசிஎல் ஏ மைதானத்தில் நடைபெறும் ஆட்டத் தில் சாந்தோம் - லீ சாட்லியர் அணிகள் மோதுகின்றன. இதே நேரத்தில் ஐசிஎல் பி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் செயின்ட் பீட்ஸ் - பிளாட்டோ அகாடமி அணிகள் மோதுகின்றன. பிற் பகல் 1 மணிக்கு நடைபெறும் ஆட்டங்களில் ரங்கம் - கன் கார்டியா அணிகளும், நீலாம் பாள் - ஜெயேந்திர சரஸ்வதி அணிகளும் மோதுகின்றன.


பள்ளி அணிகளுக்கு இடையே மாநில அளவிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்று நெல்லை சங்கர்நகர் இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்ற 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் சாந்தோம்-லிசாட்லியர் அணியும், பகல் 1 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஸ்ரீரங்கம்-கான்கோர்டியா அணியும் (ஏ மைதானம்) மோதுகின்றன. 

‘பி’ மைதானத்தில் காலை 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் செயின்ட் பீட்ஸ்-பிளாட்டோஸ் அகாடமி அணியும், மதியம் 1 மணிக்கு நடைபெறும் போட்டியில் நீலாம்பால்-ஜெயேந்திரா அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நெல்லையில் நேற்று நடந்தது. இதில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் சண்முகம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி விஸ்வநாதன் மற்றும் தட்சணாமூர்த்தி, ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.