கே.பி.ஆர்.' கோப்பை, கால்பந்து - இந்துஸ்தான் அணி சாம்பியன்


அரசூர் கே.பி.ஆர்.,இன்ஜி.,கல்லுாரி சார்பில், 'கே.பி.ஆர்.' கோப்பை, அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான கால்பந்து போட்டி, கல்லுாரி வளாகத்தில் 3 நாளாக நடந்தது; 22 அணிகள் பங்கேற்றன.முதல் அரை இறுதி போட்டியில், இந்துஸ்தான் இன்ஜி.,கல்லுாரி 1-0 கோல் கணக்கில், 'பெனல்டி ஷூட் அவுட்' முறையில், நேரு இன்ஸ்டிடியூட் தொழில்நுட்ப கல்லுாரியையும்;மற்றொரு அரை இறுதி போட்டியில், கிருஷ்ணா இன்ஜி.,தொழில்நுட்ப கல்லுாரி, 2-0 கோல் கணக்கில் பி.பி.ஜி.,தொழில்நுட்ப கல்லுாரியையும் வென்றது.இறுதி போட்டியில், இந்துஸ்தான் இன்ஜி.,கல்லுாரி 2-0 கோல் கணக்கில், கிருஷ்ணா இன்ஜி.,தொழில்நுட்ப கல்லுாரியை வென்றது.