ஆசிய ஆணழகன் போட்டி வெண்கலம் வென்ற தமிழர்-சென்னையைச் சேர்ந்த வீரர் அரசு


ஆசிய ஆணழகன் போட்டியில், சென்னையைச் சேர்ந்த வீரர் அரசு, வெண்கலப் பதக்கம் பெற்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.ஆசிய ஆணழகன் போட்டி, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான, 52வது ஆசிய ஆணழகன் போட்டி, மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேவில், நேற்று முன்தினம் நடந்தது.இதில், 80 கிலோ எடை பிரிவில், உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பவல் உமுர் சாகாவ் தங்கப் பதக்கம் வென்றார். மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விராஜ் சர்மால்கர் என்பவர், வெள்ளிப் பதக்கம் தட்டிச் சென்றனர்.சென்னை, ஆலந்துாரைச் சேர்ந்த அரசு, 48, என்பவர், மூன்றாவது இடம் பிடித்து, வெண்கலப் பதக்கம் பெற்று, தமிழகத்திற்கு மட்டுமல்லாது, இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார்.இவர் சர்வதேச ஆணழகன் போட்டியிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.