தேசிய, 'ரோப் ஸ்கிப்பிங்' சிறுவர்கள் அசத்தல்


தேசிய அளவிலான, 'ரோப் ஸ்கிப்பிங் சாம்பியன்ஷிப்' போட்டியின் பல்வேறு பிரிவுகளில், தமிழக சிறுவர்கள் வெற்றி பெற்று அசத்தினர்.


காஷ்மீர் ரோப் ஸ்கிப்பிங் சங்கம் சார்பில், தேசிய அளவிலான ரோப் ஸ்கிப்பிங் சாம்பியன்ஷிப் போட்டி, காஷ்மீரில் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.இதில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இந்த போட்டிகள், 'சப் - ஜூனியர், ஜூனியர் உட்பட, மூன்று பிரிவுகளில் நடைபெற்றன. 


இதில், சென்னையைச் சேர்ந்த, 16 சிறுவர் - சிறுமியர், தமிழக அணி சார்பில் பங்கேற்றனர். பல்வேறு எடை பிரிவு போட்டியில் பங்கேற்ற தமிழக சிறுவர்கள், ஒரு தங்கம், 14 வெள்ளி, 9 வெண்கலம் என, 24 பதக்கங்களை வென்று, சாதனை படைத்துள்ளனர்.