நாங்கள் நிச்சயம் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது - ஆர்.மிதுன்We believe we can win, says Mithun of Kovai Kings


சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018ஆம் ஆண்டு தொடரின், எலுமினேட்டர் போட்டி, திண்டுக்கல், நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 09ஆம் தேதியன்று இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. லைகா கோவை கிங்ஸ் அணியும், ஐட்ரீம் காரைக்குடி காளை அணியும் மோதிய எலுமினேட்டர் சுற்றுப் போட்டியில் காரைக்குடி காளை அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் வீழ்த்தியது. வெற்றிக்கு பின்னர் லைகா கோவை கிங்ஸ் அணி வீரர் ஆல்-ரவுண்டர் ஆர்.மிதுன் செய்தியாளர்களை சந்தித்தார். அதன் விவரம் பின்வருமாறு: கேள்வி: கோவை அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது குறித்து.. ஆர்.மிதுன்: ரொம்ப உற்சாகமாக இருக்கிறது. அருமையான ஆட்டம் இது. பந்துவீச்சு நன்றாக செய்தோம். அதே மாதிரி கேப்டன் அபினவ் முகுந்த் நேர்மறையான சிந்தனையோடு எங்களை அணுகினார். நல்ல உற்சாகத்தை அளித்தார். நிச்சயம் இறுதிப்போட்டிக்குச் சென்று கோப்பையை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. கேள்வி: 138 ரன்கள் வெற்றிபெற போதுமான ரன்கள் என்று நினைத்தீர்களா? ஆர்.மிதுன்: கடந்த மூன்று போட்டிகளாக பார்த்தீர்கள் என்றால், 130 ரன்களுக்குள் தான் எடுத்திருந்தோம். அதே ஆற்றலோடு இங்கும் செய்தோம். அதே ஆற்றல் பந்துவீச்சாளர்கள் அனைவருக்கும் இருந்தது. கேப்டன் அபினவ் முகுந்த் நம்முடைய இயல்போடு ஆடுவோம் என்று கூறினார். அதன்படி நாங்களும் நன்றாக செயல்பட்டோம். கேள்வி: இதுதான் உங்களது முதல் போட்டி.. முதல் பந்தே சிக்ஸர் வழங்கினீர்கள்... பந்துவீசும் போது எப்படி இருந்தது? ஆர்.மிதுன்: முதல் பந்தில் சிக்ஸர் வழங்கியதும் மிகவும் சோர்ந்து போனேன். பிறகு கேப்டன் அபினவ் முகுந்த் என்னிடம், பரவாயில்லை. கவலைப்படாமல் வீசு என்றார். அடுத்த இரண்டு பந்திலும் விக்கெட் கிடைத்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. கேள்வி: அடுத்தப் போட்டியில் மதுரை அணியை எதிர்கொள்ளப்போவது குறித்து.. ஆர்.மிதுன்: நமது வேலையை நாம் சரியாக செய்தால் போதும், மதுரை அணியை வென்று விடலாம். நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. Lyca Kovai Kings will face Siechem Madurai Panthers in Qualifier 2 on Friday, Aug 10, at the NPR College ground in Natham (Dindigul) after they defeated iDream Karaikudi Kaalai in the 2018 Sankar Cement-TNPL Eliminator. Debutant off-spinner R Mithun (1-31) from Kovai Kings spoke to the media after the match. Excerpts: On being one step away from the final... Very excited. It was a wonderful match today, we bowled really well and also captain Abhinav Mukund was in a very good mindset. We all believe that we will definitely be the champions this year and lift the cup. If we keep playing with the same effort, we will definitely win. Was a total of 137 enough... We had similar scores in our last three matches so with the same positive energy, we came here and played well. Abhinav (Mukund) strictly asked us to stick to basics and we focused on it and did well. On your debut performance… When I was hit for a six on the first ball, I became quite nervous. Abhinav then came and spoke to me saying he has trust in me and then I took a wicket which made me very happy. On the team’s bowling performance... K Vignesh (KV), Natarajan and Ajith Ram are amazing bowlers. KV bowled really well with the new ball. Natarajan is a specialist during the death overs and bowled excellently today.