காரைக்குடி காளை அணியை வீழ்த்தி இரண்டாவது தகுதிச்சுற்றுக்குள் நுழைந்தது கோவை கிங்ஸ்.Kovai Kings defeat Karaikudi Kaalai, to meet Madurai Panthers in Qualifier 2


சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018ஆம் ஆண்டு தொடரின், எலுமினேட்டர் சுற்றுப் போட்டியில் காரைக்குடி காளை அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் வீழ்த்தியது. சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018ஆம் ஆண்டு தொடரின், எலுமினேட்டர் போட்டி, திண்டுக்கல், நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 09ஆம் தேதியன்று இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இதில், லைகா கோவை கிங்ஸ் அணியும், ஐட்ரீம் காரைக்குடி காளை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற காரைக்குடி காளை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி முதலில் கோவை அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷாருக்கான் 13 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் வெளியேறினார். அதன் பின்னர் கோவை அணி மெதுவாக ஆடியது. இதனால், பவர்பிளே முடிவில் கோவை அணி 38 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆர்.ரோஹித் 4 ரன்களிலும், ஆண்டனி தாஸ் 8 ரன்களிலும் வெளியேற 10 ஓவர்கள் முடிவில் 57 ரன்கள் எடுத்தது. விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தவண்ணம் இருந்ததால், கோவை அணி ரன் குவிக்க தடுமாறியது. மறுபுறம் கேப்டன் அபினவ் முகுந்த தனியாக போராடிக்கொண்டு இருந்தார். அகில் ஸ்ரீநாத் 5 ரன்களில் ராஜ்குமார் பந்துவீச்சில் வெளியேறினார். 44 பந்துகளில் அரைச்சதம் கடந்த கேப்டன் அபினவ் முகுந்த் அடுத்த இரண்டாவது பந்தில் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அவர் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர்கள் உட்பட 51 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர், கோவை அணி வீரர்கள் யாரும் சரியான பாட்னர்ஷிப் அமைக்கவில்லை. அஸ்வின் வெங்கட்ராமன் 15, எம்.பி.ராஜேஷ் 10, ஆர்.மிதுன் 10 ரன்களில் என அடுத்தடுத்து வெளியேற 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. காரைக்குடி காளை அணி தரப்பில் அதிகப்பட்சமாக ஆர்.ராஜ்குமார் 4 விக்கெட்டுகளையும், கிஷன் குமார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர், 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி காளை அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான அனிருதா ஸ்ரீகாந்த் 11 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து மற்றொரு தொடக்காரர் வி.ஆதித்யா 3, ஆர்.ஸ்ரீநிவாசன் 3, ஆர்.கவின் 1 என அடுத்தடுத்து வெளியேற பவர்பிளே ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், யோ மகேஷ் 2 ரன்களில் வெளியேறி மேலும் அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து ஆர்.ராஜ்குமார் 14 ரன்களில் வெளியேற 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது தடுமாறியது. ஒருபுறம் மான் கே பாஃப்னா தனியாக போராடிக் கொண்டிருந்தார். இந்நிலையில், ஆட்டத்தின் 13ஆவது ஓவரில் ஷாஜஹான் 8 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் வெளியேறினார். கடைசி 3 ஓவர்களில் 42 ரன்கள் தேவைப்பட்டது. 18ஆவது ஓவரின் முதல் மான் கே பாஃப்னா கடைசி பந்தில் எல்.பி.டபள்யூ முறையில் வெளியேறினார். 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 113 ரன்கள் எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணி தோல்வி அடைந்தது. காரைக்குடி காளை அணி தரப்பில் அதிகப்பட்சமாக நடராஜன் 4 விக்கெட்டுகளையும், கே.விக்னேஷ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். லைகா கோவை கிங்ஸ் அணி நாளை நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில், சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில், வெற்றிபெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை [12-08-18] அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொள்ளும். விருதுகள்: கிருஷ்ணா மைன்ஸ் சூப்பர் ஒயிட் வழங்கும் சூப்பர் பவுண்டரிகள் விளாசியவர்களுக்கான விருது அபினவ் முகுந்த் [லைகா கோவை கிங்ஸ்] அவர்களுக்கு வழங்கப்பட்டது. சங்கர் சிமெண்ட் வழங்கும் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்களுக்கான விருது மான் கே பாஃப்னா [ஐட்ரீம் காரைக்குடி காளை] அவர்களுக்கு வழங்கப்பட்டது. யூக்கிடாஸ் ஃபண்டாஸ்டிக் வழங்கும் சிறந்த வீரருக்கான விருது கே.விக்னேஷ் [லைகா கோவை கிங்ஸ்] அவர்களுக்கு வழங்கப்பட்டது. மிகுந்த புத்துணர்ச்சியூட்டும் விளையாட்டு வீரருக்கான விருது ஆர்.ராஜ்குமார் [ஐட்ரீம் காரைக்குடி காளை] அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதிக டாட் பந்துகள் வீசியவருக்கான விருது கே.விக்னேஷ் [லைகா கோவை கிங்ஸ்] அவர்களுக்கு வழங்கப்பட்டது. சங்கர் சிமெண்ட் வழங்கும் ஆட்ட நாயகன் விருது மற்றும் காசோலை அபினவ் முகுந்த் [லைகா கோவை கிங்ஸ்] அவர்களுக்கு வழங்கப்பட்டது. Lyca Kovai Kings defeated iDream Karaikudi Kaalai by 24 runs in a low-scoring Eliminator at the NPR College ground in Natham (Dindigul) on Thursday, Aug 9, and will meet Siechem Madurai Panthers in Qualifier 2 at the same venue on Friday, Aug 10, in the 2018 Sankar Cement-TNPL. The winner of Qualifier 2 will travel to Chennai for the final against Dindigul Dragons to be played at the MA Chidambaram Stadium on Sunday, Aug 12. Chasing 138 to win, Karaikudi Kaalai lost their captain and batting mainstay S Anirudha for 11 (10b, 2x4) in the third over that triggered off a collapse as the side went from 14/0 to 23/4. Maan K Bafna 40 (38b,2x4,2x6) tried his best to keep Karaikudi Kaalai alive but failed to get sufficient support aside of No 9 Kishan Kumar 25 (21b, 2x4, 1x6). For Kovai Kings, medium-pacers T Natarajan (4-24) and K Vignesh (3-19) excelled. Earlier, put in to bat, Kovai Kings began with an opening-wicket stand of 34 runs but the inning nosedived after Shahrukh Khan’s dismissal. Captain Abhinav Mukund 51 (46b, 4x4, 1x6) waged a lone battle while the middle-order capitulated. Medium-pacer R Rajkumar picked up 4-30 for Karaikudi Kaalai before Kovai Kings, with useful contributions from the lower middle-order, reached 137/8 in 20 overs. Brief scores: Lyca Kovai Kings 137/8 in 20 overs (A Mukund 51, R Rajkumar 4-30, Kishan Kumar 2-27) bt iDream Karaikudi Kaalai 113 all out in 19.4 overs (Maan Bafna 40, Kishan Kumar 25, T Natarajan 4-24, K Vignesh 3-19). AWARDS ‘Krishna Mines Super White Super Fours’ Award: A Mukund (Lyca Kovai Kings) ‘Sankar Cement’ Maximum Sixes Award: Maan Bafna (iDream Karaikudi Kaalai) ‘Equitas Funtastic’ Player of the Match: K Vignesh (Lyca Kovai Kings) ‘Sprite Most Refreshing Player’ Award: R Rajkumar (iDream Karaikudi Kaalai) ‘Most numbers of DOT BALL bowled in the match’ Award: K Vignesh (Lyca Kovai Kings) ‘Sankar Cement Man of the Match’ Award: A Mukund (Lyca Kovai Kings)