தேசிய டேக்வான்டோகொளத்துார், எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி யுதிஷ்குமார் மூன்றாமிடம்


 

தேசிய டேக்வான்டோ போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த யுதிஷ்குமார், வெண்கலப் பதக்கம் வென்றார்.
 
 
மணிப்பூர் மாநிலம்,இம்பால் பகுதியில், இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில், தேசிய அளவிலான டேக்வான்டோ போட்டி, நவ., 26ல் துவங்கி, 30ம் தேதி வரை நடந்தது. இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 512 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
 
 
இதில், 14 வயதிற்குட்பட்டோருக்கான மாணவர், 23 - 25 கிலோ பிரிவில், தமிழகம் சார்பில் பங்கேற்ற, சென்னை, கொளத்துார், எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளியைச் சேர்ந்த யுதிஷ்குமார், மூன்றாமிடம் பிடித்தார். அந்த மாணவருக்கு, மணிப்பூர் மாநில முதல்வர், நாங்தோம்பம் பீரேன் சிங், வெண்கலப் பதக்கம் மற்றும்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.