முதல்வர் கோப்பைக்கான போட்டிகள், செப்., மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது


தமிழகம் முழுவதும், நடப்பாண்டு நடக்கவுள்ள முதல்வர் கோப்பைக்கான போட்டிகளை நடத்த, 8.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், 21 வயதுக்கு உட்பட்ட சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தேவையான பயிற்சியளித்து மாநில போட்டிக்கு அனுப்பும் பணியை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொள்கிறது.

நடப்பாண்டுக்கான, முதல்வர் கோப்பை போட்டிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

இப்போட்டிகளை நடத்தவும், பரிசளிக்கவும், 8.90 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் வீரருக்கு, ஆயிரம் ரூபாய், மண்டல அளவில் வெற்றி பெறுவோருக்கு, 5 ஆயிரம் ரூபாய், மாநில அளவில் பரிசு பெறுவோருக்கு, ஒரு லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.


'முதல்வர் கோப்பைக்கான போட்டிகள், செப்., மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கியுள்ளன,' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.