தென் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், எஸ்.ஆர்.எம்., முதலிடத்தை பிடித்து, தொடர்ந்து ஐந்தாவது முறையாக, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியதுSRM IST Table Tennis Men Team Won South Zone Inter University Table Tennis Tournamnet


தென் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், எஸ்.ஆர்.எம்., முதலிடத்தை பிடித்து, தொடர்ந்து ஐந்தாவது முறையாக, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.இந்திய பல்கலைக்கழக ஆதரவுடன், விசாகப்பட்டினம், ஜி.ஐ.டி.ஏ.எம்., பல்கலை சார்பில், தென் மண்டல டேபிள் டென்னிஸ் போட்டி, கல்லுாரி வளாகத்தில், டிச., 3ல் துவங்கி, நாளை வரை நடைபெறுகிறது.பல்கலை அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில், தென் மண்டல அளவிலான, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, பல்கலை அணிகள் பங்கேற்றன. அதில், 'நாக் - அவுட்' மற்றும் 'லீக்' முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் மாலை நடந்த ஆண்களுக்கான காலிறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 3 - 0 என்ற செட் கணக்கில், கோவை, பாரதியார் பல்கலை அணியை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து நடந்த அரையிறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 3 - 0 என்ற செட் கணக்கில், கர்நாடக பல்கலை அணியை தோற்கடித்தது.நேற்று நடந்த இறுதிப் போட்டியை, ஐதராபாத், உஸ்மானியா பல்கலை அணியுடன், சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி எதிர் கொண்டது. இந்த போட்டியில், 3 - 2 என்ற ஒரு செட் கணக்கில், எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இந்த வெற்றியால், தென் மண்டல போட்டிகளில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

 

South Zone Inter University Table Tennis Men Tournament 2018-19

3rd to 5th December, 2018

organized by GITAM University, Visakapatnam

 

 

Results

 

 

Quarter Finals

 

 

 SRM IST                   Beat                Bharathiar University, Coimbatore

 Score: 3                                                         0

 

 

Semi Finals

 

 

SRM IST                    Beat                Karnataka University, Dharwad

Score: 3                                                          0

 

 

Finals

 

 

SRM IST                    Beat                Osmania University, Hyderabad

Score: 3                                                          2

 

 

Name of the Players:

S.Nikhil,Abinay.V, Srikrishna.A, Sachin Viswanath, Ali Mohammed

Manager: Dr.M.Senthilkumar, Coach:Mr.Aditya Narasimhan

 

 

 

 

Final Standings 

 

 

SRM IST        -           Winner

Osmania University - Runner

University of Madras – Third Place

Karnataka University, Dharwad – Fourth Place

 

 

Above mentioned University are qualified to play the All India Inter University Table Tennis Men Tournament organized by GITAM University, Visakapatnam , from 6th to 8th December, 2018

 

 

Note: This is the 5th Consecutive Year SRMIST Table Tennis Men Team Won GOLD

in the South Zone Inter University  Table Tennis Tournaments.