முதல்வர் கோப்பை விளையாட்டு


முதல்வர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை, வரும், 22ம் தேதி துவக்க, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஆண்டுதோறும், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.இந்தாண்டுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை, 22ம் தேதி முதல், 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில், தடகளம், நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், கபடி, ஜிம்னாஸ்டிக், பளு துாக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்க உள்ளன. சென்னை மாவட்டத்தில், இப்போட்டி குறித்த முறையான அறிவிப்பு, அடுத்த சில தினங்களில் வெளியாக உள்ளது.