தேசிய கூடைப்பந்து போட்டி: மதுரை வீரர்கள் சாதனை


விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 35வது இளையோர் கூடைப்பந்து போட்டி ராஜஸ்தான் உதயப்பூரில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக அணி 3வது இடம் பெற்றது.ராஜஸ்தான் அணி முதலிடம், மகாராஷ்டிரா அணி 2ம் இடம் பெற்றது. தமிழக அணியில் மதுரை விளையாட்டு விடுதி மாணவர்கள் கே.குருபிரசாத், எஸ்.அருண்குமார் பங்கேற்றனர்.

தமிழக அணியின் பயிற்சியாளராக மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் ராஜா இருந்தார். வெற்றி பெற்ற தமிழக அணியையும், மதுரை வீரர்களையும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகுமார் மற்றும் பயிற்றுனர்கள் பாராட்டினர்.