விளையாட்டு விருது விண்ணப்பம் வரவேற்பு


மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க, வீரர்களுக்கு அழைப்பு

விடுக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஆண்டுதோறும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்றோருக்கு, ௧ லட்சம் ரூபாய் மற்றும், 10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்த விருது, விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாது பயிற்றுனர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், விளையாட்டு போட்டிகளை

நடத்தும் நிர்வாகி, ஆதரவளிக்கும் நிறுவனம், நன்கொடையாளர் மற்றும் ஆட்டத்தின் நடுவர்

உள்ளிட்டோருக்கும், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில், தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.இந்த விருதுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விபரங்களை, www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட

விண்ணப்பங்கள், அக்., 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.