யூத் தடகளம்: தமிழக வீராங்கனை தங்கம்ST JOSEPHS SPORTS ACADEMY THABITHA WON GOLD MEDAL IN 100 M HURDLES


ஆசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா தங்கப் பதக்கம் வென்றார். ஹாங்காங்கில், 3வது ஆசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் பந்தய துாரத்தை 13.86 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த சென்னையை சேர்ந்த தபிதா பிலிப் மகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் இந்தியாவின் விபின் குமார் அதிகபட்சமாக 69.63 மீ., துாரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் இந்தியாவின் ஹர்ஷிதா ஷெராவாத், 61.93 மீ., துாரம் எறிந்து 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம். மற்ற போட்டிகளில் இந்தியாவின் தீபக் யாதவ் ('போல் வால்ட்', 4.70 மீ.,), அஜய் (1500 மீ., ஓட்டம், 57.25 வினாடி) தலா ஒரு வெண்கலம் கைப்பற்றினர். முதல் நாள் முடிவில் இந்தியாவுக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 5 பதக்கம் கிடைத்தது. ST JOSEPHS SPORTS ACADEMYThabitha Philip Maheswaran of India wins Gold Medal in Girls 100M Hurdles run final. Asian Youth Athletics Championship 2019 Hongkong தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.