தேசிய இளையோர் தடகளம்: தமிழக வீராங்கனை தபிதா தங்கம் வென்றார் - ஆசிய போட்டிக்கு தகுதிImage may contain: 2 people, people smiling, people standing and outdoorதேசிய இளையோர் தடகளம்: தமிழக வீராங்கனை தபிதா தங்கம் வென்றார் - ஆசிய போட்டிக்கு தகுதி


தேசிய இளையோர் தடகள போட்டியில் தமிழக வீராங்கனை தபிதா தங்கம் வென்றார். இதன்மூலம் அவர் ஆசிய போட்டிக்கு தகுதிபெற்றார்.
, 

16-வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா 14.14 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். கேரள வீராங்கனை ஆன் ரோஸ் டாமி 14.56 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கமும், மற்றொரு தமிழக வீராங்கனை அட்சயா 15.35 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர். தங்கப்பதக்கம் வென்ற தபிதா ஹாங்காங்கில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.