பள்ளி கூடைப்பந்து போட்டி செட்டிநாடு வித்யாஸ்ரம் சாம்பியன்


சென்னையில் நடந்த, பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில், செட்டிநாடு வித்யாஸ்ரம் பெண்கள் அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.கே.கே.நகரில் உள்ள, பி.எஸ்.பி.பி., பள்ளி சார்பில், சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டிகள், பள்ளி வளாகத்தில் நடந்தன. போட்டியில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, 28 பள்ளி அணிகள், 'நாக் - அவுட்' முறையில் விளையாடின.மாணவியருக்கான இறுதிப் போட்டியில், செட்டிநாடு வித்யாஸ்ரம் மற்றும் கே.கே.நகர், பி.எஸ்.பி.பி., அணிகள் மோதின. அதில், 34 - 26 என்ற புள்ளிக் கணக்கில், செட்டிநாடு அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.மாணவர்களுக்கான போட்டியில், நுங்கம்பாக்கம், பி.எஸ்.பி.பி., அணி, 31 - 16 என்ற கணக்கில், அடையாறு, ஸ்ரீ சங்கரா பள்ளி அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றது. பட்டம் வென்ற இரு அணிகளுக்கும், கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.