தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் வி ஐ டி மாணவ, மாணவியர்கள் சாதனை - வி ஐ டி துணைத்தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன் பாராட்டு.


தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் வி ஐ டி மாணவ, மாணவியர்கள் சாதனை - வி ஐ டி துணைத்தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன் பாராட்டு. ஹைதராபாத்தில் உள்ள மகேந்திர பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் வி ஐ டி வேலூர் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அதன் விபரம் பின்வருமாறு. ஆண்கள் பிரிவில் சதுரங்கம், கூடைபந்து, மேஜை பந்து, கைப்பந்து போட்டிகளில் முதலிடமும், கால்பந்து போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றனர். பெண்கள் பிரிவில் கால்பந்து போட்டியில் முதலிடம் பெற்றனர். மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் கோப்பையை மாணவ, மாணவிகள் கைபற்றினர். இதே போல் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் ஆண்கள் பிரிவில் கைப்பந்து போட்டியில் இரண்டாம் இடம், கால்பந்து, கூடைப்பந்து, சதுரங்கம் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தனர். பெண்கள் பிரிவில் கூடைப்பந்து போட்டியில் முதலிடமும், சதுரங்கத்தில் மூன்றாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை வி ஐ டி துணைத்தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன் பாராட்டினார். உடன் உடற்கல்வி இயக்குனர் முனைவர் தியாகசந்தன், இணை உடற்கல்வி இயக்குனர் முனைவர் மங்கையர்க்கரசி அருண், உதவி உடற்கல்வி இயக்குனர்கள் பரமானந்தன், கற்பகம் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்